ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் நேற்று, இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 12 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட, 90 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது
ஆப்கானில் தாலிபான்கள் கைபற்றியதிலிருந்து பதட்ட நிலைதான் நீடித்து வருகிறது. இந்த நிலையில் காபூல் விமான நிலையத்திற்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியிருந்தது.
இந்நிலையில், நேற்று மாலை காபூல் விமான நிலையம் அருகே தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்காவின் பெண்டகன் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் சிறுவர்கள் உட்பட அப்பாவி மக்கள் பலர் உடல் சிதறி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
காபூல் விமான நிலையத்தின் நுழைவு வாயில்இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இது தற்கொலைத் தாக்குதலாக இருக்கலாம் என்று அமெரிக்க பெண்டகன் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 3 அமெரிக்க ராணுவத்தினரும், தாலிபான்களில் சிலரும் படுகாயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற நினைக்கும் மக்களை ஏற்கனவே தாலிபான்கள் தடுத்து நிறுத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.