ஜெயலலிதா மரணம் விவகாரம்: 90% விசாரணை முடிந்துவிட்டது – ஆறுமுகசாமி ஆணையம் தகவல்

SHARE

ஜெயலலிதா மரண வழக்கில் 90% விசாரணை முடிந்துவிட்டதாக ஆறுமுக சாமி ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தைவழிநடத்திய ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார்.

அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்த நிலையில் இது தொடர்பான விசாரணையை நடத்த அப்போதைய அதிமுக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்தது.

விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும் இதுவரை ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் இருந்து ஜெயலலிதா மரணத்தின் இருக்கும் மர்மம் குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை முடிக்க ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு சுப்பிரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது அப்போது இதுவரை 11 முறை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த விசாரணை ஆணையம் தரப்பு வழக்கறிஞர், வழக்கு தொடர்பாக 100 க்கும் மேற்பட்டோரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் 90 சதவீத விசாரணை முடிந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

அதைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் பள்ளி திறப்பு எப்போது ? – நாளை மறுநாள் முக்கிய ஆலோசனை

Admin

எலான் மஸ்க் செய்த வேலையால் தமிழக நிறுவனத்திற்கு ரூ. 7 கோடி லாபம்?

Admin

தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.!!

Admin

போலீசார் அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கக்கூடாது: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

Admin

நீட் தேர்வு பாதிப்பை ஆய்வு செய்ய குழு – முதல்வர் அறிவிப்பு..!

Admin

கர்நாடாக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு! யார் இந்த பசவராஜ்?

Admin

மணிகண்டனிடம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை சாந்தினி வழக்கு..!!

Admin

நீட் விலக்கு மசோதா நிறைவேற்றம் – அதிமுக ஆதரவு, பாஜக வெளிநடப்பு!

Admin

நிதிக்காக இணையவில்லை, உதயநிதிக்காக திமுகவில் இணைந்துள்ளேன்… தோப்பு வெங்கடாச்சலம்!

Admin

சேலத்தில் போலீசாரால் தாக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Admin

புதிய கல்விக் கொள்கை வேண்டாம்…. புறக்கணித்த தமிழக அரசு!

75வது சுதந்திர தினத்தில் வெளியான சூப்பர் அறிவிப்பு…!

Admin

Leave a Comment