முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனையை அதிகாரிகள் நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் தற்போது வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.20க்கும் மேற்பட்ட வருமான வரி சோதனை அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்ஆர் விஜயபாஸ்கர். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக பல்வேறு தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.
போக்குவரத்து துறை அமைச்சராக எம்ஆர் விஜயபாஸ்கர் இருந்தபோது கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தற்போது அவருடைய வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வருமான வரி சோதனை முடிவில் அவருடைய வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணம் குறித்த தகவல்களை வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.