ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட் பயணம் தோல்வி அடைந்துள்ளது
தொழில்நுட்ப கோளாறால் Eos-03 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
கிரையோஜெனிக் எஞ்சின் பகுதியில் ஏற்பட்ட சிக்கலால் முழுமையாக திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் கூறியுள்ளார்.
கிரையோஜெனிக் எஞ்சின் பகுதியில் ஏற்பட்ட சிக்கலால் ராக்கெட்டில் இருந்து செயற்கைக்கோளை விண்ணில் நிலை நிறுத்தமுடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சரியாக காலை 5.43 மணிக்கு காலை ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. எனினும் அதன் பயணம் தோல்வி அடைந்துள்ளது.
இஸ்ரோ இதுவரை 14 ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை விண்ணில் செலுத்தியுள்ளது. இதில் 4 ராக்கெட்கள் பயணம் தோல்வி அடைந்துள்ளது
இயற்கை பேரழிவுகள், விவசாயம், வானவியல், கணிதவியல், பேரிடர் வகைகள் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக இ.ஓ.எஸ்.3 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோளை இந்தியா உருவாக்கியது