பிரபல செய்தி ஊடகங்களான பாலிமர் மற்றும் நியூஸ் 18 ஆகியவை டிராக்டர் உருவமும் 786786 என்ற எண்ணும் உள்ள பணத்தாளை பொதுமக்கள் வைத்திருந்தால், அவர்கள் ’காயின் பஜார் டாட் காம்’ என்ற இணைய தளத்திற்கு சென்று அதனை 30,000 ரூபாய்க்கு விற்கலாம் என்று செய்தி வெளியிட்டு உள்ளன. இது தவறான செய்தி ஆகும்.
காயின் பஜார் டாட் காம் என்பது உண்மையில் ஒரு இணைய விற்பனை தளம் மட்டுமே, அவர்கள் விற்பனையாளர்கள் அல்ல. அதாவது அவர்களின் இணைய தளத்தின் வழியாக பிறர் தங்கள் நாணயங்கள் மற்றும் பணத்தாள்களை விற்க காயின் பஜார் டாட் காம் அனுமதிக்கிரதே தவிர, அவர்கள் நேரிடையாக விற்பது கிடையாது. இப்படி நடக்கும் விற்பனைக்கும் அவர்கள் நேரடி பொறுப்பாளிகள் கிடையாது.
காயின் பஜார் டாட் காம் – விற்பனைத் தளத்தில் உள்ள, ஓவியா கலெக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தங்களிடம் உள்ள 786786 என்ற எண் கொண்ட டிராக்டர் உருவம் பொறிக்கப்பட்ட 5 ரூபாய் பணத்தாளை பிறர் ரூபாய் 30,000 கொடுத்து வாங்கலாம் என்றுதான் பதிவிட்டு இருந்தது. தாங்கள் வாங்கிக் கொள்வதாக அவர்கள் கூறவில்லை. அந்த விலைக்கு யாரும் வாங்காத காரணத்தால் இப்போது விலையை 30% குறைத்து ஓவியா கலெக்ஷன்ஸ் அறிவித்து உள்ளனர். இன்னும் பெரிய அளவில் விலை குறையக் கூடும்.
இதை செய்தி நிறுவனங்கள் தவறாகப் புரிந்து கொண்டதே பெரிய புரளி கிளம்பக் காரணமாக இருந்துள்ளது. 786786 எண் கொண்ட 5 ரூபாய் நோட்டுக்கு அவ்வளவு விலையும் இல்லை, யாரும் அவ்வளவு விலை கொடுப்பதாகக் கூறவும் இல்லை.
இது பற்றி விரிவாக அறிய கீழே உள்ள காணொலியைக் காணவும்.
https://www.youtube.com/watch?v=ChaA97ntXng&lc=UgyKEWLApW43RWnLG6V4AaABAg
- இரா.மன்னர் மன்னன்