200 ரன்களைக் கடந்த 2 அணிகள்! கடைசி பந்தில் வென்ற பஞ்சாப் கிங்ஸ்! ஐ.பி.எல்.லில் அதிரடி!

SHARE

ஐபிஎல் டி20யின் 4ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் மோதிய பஞ்சாப் கிங்ஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

மும்பை:

இது தான் டி 20 மேட்ச் என்பது போல் இருந்தது மும்பை வான்கடே மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய நேற்றைய ஆட்டம். 

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. பஞ்சாப் கிங்ஸ்ஸின் தொடக்க ஆட்டகாரர்களாக கேஎல் ராகுலும் மயாங்கும் இறங்கினர். சக்காரியாவின் பந்துவீச்சில் சொற்ப ரன்களிலேயே அவுட்டாகி போனார் மயாங் அகர்வால். பிறகு வந்த கெயில், கேஎல்ராகுலுடன் இணைந்து நல்ல ஆட்டத்தை கொடுத்தார். இந்த கூட்டணி அதிக ரன்களை குவித்தது. 10ஆவது ஓவரில் ரியானின் பந்துவீச்சில் அவுட் ஆனார் கெயில்.  

அடுத்த சூப்பர் ஹூரோவாக களம் இறங்கினார் தீபக் ஹூடா.  க்ருணால் பாண்டிவுடனான பிரச்சனையால் பரோடா அணியில் இருந்து நீக்கப்பட்ட வர்லாற்றைக் கொண்ட தீபக் ஹூடா, பழைய கோபமோ என்னவோ அடித்து நொறுக்கினார். 18வது ஓவரில் மோரிஸ்ஸின் பந்தில் அவுட் ஆனார் ஹூடா. பிறகு பூரன், ஷாருக், ஜூய் என்று அடுத்தடுத்த வீரர்களும்  சில ரன்களிலேயே வெளியேறினர். 

கேஎல்ராகுல் மட்டுமே முதல் ஓவரில் இருந்து கடைசி ஓவர் வரைக்கும் ஆடி 50 பந்துகளில் 91 ரன்கள் குவித்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் சக்காரியாவின் பந்தில் ஆட்டம் இழந்தார். கேஎல்ராகுல், அகர்வால், கெயில், ஹூடா, ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 221 ரன்கள் எடுத்து  20 ஓவர்களை முடித்தனர் பஞ்சாப் கிங்ஸ் அணியினர்.

20 ஓவரில் 222 ரன்கள் எடுத்தால் வெற்றி – என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் மனன் வோரா இறங்கினர். இவர்கள் அதிரடியாக ஆடி ரன்களை எடுப்பார்கள் என்று எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இருவருமே சில ரன்களிலேயே வெளியேறினர். 

அடுத்து வந்த ராஜஸ்தான் ராயல்ஸ்ஸின் புது கேப்டன் சஞ்சு சாம்சன் நிதானமாக ஆடி ரன் எடுத்தார். அடுத்தடுத்து வந்த பட்லர், டூபே, பராங், திவாட்டியா அனைவரும் சீக்கிரமே வெளியேறினாலும், சாம்சன் எதற்கும் அசராமல் நின்று விளையாடினார். கடைசி ஓவர் வரைக்கும் எப்படியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜெயித்து விடும் என்றே ரசிகர்கள் நம்பினர், ஆனால் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் ஸ்ட்ரைக்கை தக்க வைத்துக் கொள்ள ரன் எடுக்க  ஓடாமல் இருந்தார் சாம்சன். 

கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி,  அபவுண்டரி எடுத்தால் சூப்பர் ஓவர் வழங்கப்படலாம் என பல குழப்பங்கள் ரசிகர்களுக்கு எழ, இறுதி வரை ஆட்டத்தின் சுவாரஸ்யத்தை கடத்தி கடைசி பந்தை சிக்ஸருக்காக தூக்கி அடித்து அவுட்டாகி ஆட்டத்தின் வெற்றியை பஞ்சாப் கிங்ஸ்க்கு கொடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ். 

சென்ற டி20 லீக் போட்டியை காட்டிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இரண்டு அணியுமே புது வேகத்துடனே விளையாடினர். இதுவரைக்கும் நடந்த போட்டிகளில் இது ஒரு சூப்பரான அதே சமயம் பரபரப்பான மேட்சாகவே இது அமைந்தது.

சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வீட்டுக் கடன் வாங்கப் போகிறீர்களா?: ரிசர்வ் வங்கி சொல்வதைக் கேளுங்கள்…

Admin

ரொனால்டோ செய்த சம்பவத்தால் நஷ்டத்தை சந்தித்த கொகோ கோலா நிறுவனம்

Admin

சாகித்ய அகாடமி விருது பெறுகிறார் எழுத்தாளர் இமையம்

Admin

கொரோனா 3ம் அலை வருமா என தெரியாது :எய்ம்ஸ் தகவல்!

Admin

மீண்டும் மீண்டும் சர்ச்சை: என்னதான் பேசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி?

Pamban Mu Prasanth

ருதுராஜ், தோனி அபாரம்… 9ஆவது முறையாக பைனலுக்கு தகுதி பெற்றது சி.எஸ்.கே…

இரா.மன்னர் மன்னன்

ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது “மேஜர் தயான்சந்த் விருது” எனப் பெயர் மாற்றம்..!!

Admin

சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் அழைப்பு

Admin

‘நீட்’ தேர்வில் ஆர்வம் காட்டாத அரசு பள்ளி மாணவர்கள் – அதிர்ச்சி தகவல்

Admin

பீட்சா டோர் டெலிவரி செய்யும் போது ரேசன் பொருட்கள் செய்ய முடியாதா? .. கேள்வி எழுப்பும் டெல்லி முதல்வர்

Admin

இந்த மருந்துக்கெல்லாம் ஜிஎஸ்டி கிடையாது.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு

Admin

கொரோனாவை கட்டுப்படுத்த புதிய மருந்து – வருகிறது 2-டிஜி!

Leave a Comment