கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான வழிமுறைகளை மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கொரோவால் நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றர். மேலும் கொரோனா காரணமாக சில குழந்தைகள் தங்களது பெற்றோர்கள் இருவரையுமே இழந்து தவிக்கும் அவலமும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பெற்றோரை இழந்து தவிக்கும் பராமரிக்க யாருமில்லாத குழந்தைகளை, அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிமுறைகளில் கூறப்பட்டு உள்ளது
- கெளசல்யா அருண்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்