சர்வதேச நிதியத்தின் மதிப்பீட்டு அறிக்கையானது நடப்பாண்டின் ஜி.டி.பி. வளர்ச்சி விகிதத்தில் இந்தியா உலகின் முதல்நிலை நாடாக இருக்கும் என்று கணித்துள்ளது.
வாஷிங்டன்.
இந்த ஆண்டுக்கான உலக வங்கியின் வசந்தகால கூட்டத் தொடர் தொடங்க இருப்பதை முன்னிட்டு உலகப் பொருளாதார வளர்ச்சியின் மதிப்பீட்டு அறிக்கையை சர்வதேச நிதியம் வெளியிட்டு உள்ளது. இந்த 2021-22ஆம் நிதியாண்டில் உலக நாடுகளின் உள்நாட்டு உற்பத்திகள் எந்த அளவில் இருக்கும் என்பதை இந்த மதிப்பீட்டு அறிக்கை முன்கூட்டியே கணித்து உள்ளது.
இதன் கணிப்புகளின்படி, 2021-22ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதமானது 12.5% இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் வெளியான முந்தைய கணிப்பான 11.5% என்பதை விடவும் 1% அதிகம் ஆகும்.
கடந்த 2020-21ஆம் நிதியாண்டில் இந்திய ஜி.டி.பி. வளர்ச்சி விகிதம் 3.3% சரிவைக் கண்டிருந்த நிலையில், இந்த ஆண்டு ஜி.டி.பி. வளர்ச்சி விகிதம் 6% உயர்வைக் சந்திக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. இதனால் இந்த நிதியாண்டில் இரட்டை இலக்க ஜி.டி.பி. வளர்ச்சி விகிதத்தை சந்திக்க வாய்ப்புள்ள ஒரே நாடாக இருந்தியா இருக்கப் போகின்றது.
இது குறித்து பேசிய சர்வதேச நிதியத்தின் தலைவர் கீதா கோபிநாத், இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்பி உள்ளதற்கான சான்றுகள் காணப்படுகின்றன என்றும் கூறி உள்ளார். இந்தக் கணிப்புகள் இந்திய பங்கு சந்தைகளில் நல்ல விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
நமது நிருபர்.