நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் படம் ஹாட் ஸ்டாரில் வெளியான சில நிமிடங்களியே இணையதளங்களில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில், நயன்தாரா நடித்துள்ள படம், நெற்றிக்கண்.
மிலிந்த் ராவ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், பார்வை யற்றப் பெண்ணாக நயன்தாரா நடித்துள்ளார்.
பெண்களை கடத்தி கொலை செய்யும் சைக்கோ கொலைகாரனை நயன்தாரா எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது கதை.
பிளைண்ட் என்ற கொரிய படத்தின் உரிமை பெற்று உருவாகியுள்ள இந்த படத்தில் படத்துக்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் படம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் இன்று 12.30 மணிக்கு வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் படம், வெளியான பத்தே நிமிடத்தில் தரத்தில் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் படம் வெளியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதே போல மேலும் சில இணையதளங்களிலும் இந்தப் படம் வெளியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
1 comment
[…] […]