சீன கம்யூனிஸ்டு கட்சியின் 100ஆவது ஆண்டு விழா நேற்றுகொண்டாடப்பட்டது.
கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டையொட்டி நேற்று சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள தியானென்மன் சதுக்கத்தில் பிரமாண்ட விழா நடந்தது. இதில் சுமார் 70 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
இந்த பிரமாண்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங்
”சீன மக்களின் தேசிய இறையாண்மையும், ஒருமைப்பாட்டையும் அசாதாரண திறனையும் யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது.
சீனாவின் தேசிய இறையாண்மையைப் பாதுகாக்க நம்பகமான வழிமுறைகள் எங்களிடம் உள்ளன.
சீனா மற்ற நாடுகளை ஒடுக்கவில்லை. நாங்கள் வேறு எந்த நாட்டினரையும் ஒரு போதும் கொடுமைப்படுத்தவோ ஒடுக்கவோ அடிபணியவோ செய்யவில்லை. நாங்கள் ஒரு போதும் அதை செய்ய மாட்டோம்.
சீனாவை யாராவது ஒடுக்க நினைத்தால் அவர்களது தலைகளை சீனாவின் பெருஞ்சுவரில் அடித்து நொறுக்குவோம். சீனாவை யாரும் அடக்குவதற்கு அனுமதிக்க மாட்டோம்.
மேலும் தைவானை சீனாவுடன் இணைப்பது கட்சியின் வரலாற்று பணி என்றும் அதற்காக தேசிய பாதுகாப்பு மற்றும் ஆயுதப்படைகளின் நவீன மயமாக்கலை நாம் துரிதப்படுத்த வேண்டும்” என பேசினார்.