ரத்த ஆறு ஓடுவதைத் தடுக்கவே நாட்டைவிட்டு வெளியேறி உள்ளேன்.. ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி

SHARE

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிய அதிபர் அஷ்ரப் கனி, கார்கள் மற்றும் ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணத்துடன் வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தான்  வந்ததால்
அதிபர் அஷ்ரப் கானி, நாட்டை விட்டு வெளியேறுமாறு என கூறப்பட்டது.

நான்கு கார்களில் கட்டுக்கட்டாக பணத்தை எடுத்துக்கொண்டு, ஹெலிகாப்டரிலும்  பணக் கட்டுகளுடன் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக, ரஷ்ய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலிபான்கள் காபூலை சுற்றி வளைத்தபோது, அவர்களது தாக்குதலை சமாளிக்க முடியாது எனத் தெரிந்ததும், அங்கிருந்து அவர் தப்பியுள்ளார். ஓமனுக்கு அஷ்ரப் கனி தப்பிச் சென்றதாகவும் ரஷ்ய தூதரக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அஷ்ரப் கனியின் அலுவலகத்தில் மேலும் கட்டுக்கட்டாக பணம் இருந்தாலும், அதனை எடுத்துச் செல்ல முடியாததால் பணக்கட்டுகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்

இந்த நிலையில்காபூலைவிட்டு வெளியேறிய பின்பு அதிபா் அஷ்ரஃப் கனி ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள முதல் பதிவில்,

ஆயுதங்களுடன் தலிபான்கள் அதிபா் மாளிகைக்குள் நுழைய வேண்டும் அல்லது 20 ஆண்டுகளாக எனது வாழ்நாளை அா்ப்பணித்து பாதுகாத்த எனது நாட்டைவிட்டு நான் வெளியேற வேண்டும் என்பதில் ஏதாவது ஒன்றை தோவு செய்ய வேண்டிய இக்கட்டான நிலையில் இருந்தேன்.

நாட்டு மக்கள் தொடா்ந்து கொல்லப்பட்டும், காபூல் நகரம் அழிக்கப்பட்டும் மிகப்பெரிய மனித பேரிடா் ஏற்பட்டிருக்கும். என்னை வெளியேற்றுவதில் தலிபான்கள் வெற்றி கண்டுள்ளனா். ரத்த ஆறு ஓடுவதைத் தடுக்கவே நாட்டைவிட்டு வெளியேறி உள்ளேன்.

கத்தி, துப்பாக்கிகளுடன் தலிபான்கள் வெற்றி பெற்றுள்ளனா்.

தற்போது நாட்டு மக்களின் கெளரவம், வளம் ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டியது அவா்களின் பொறுப்பாகும். அவா்கள் மக்கள் மனதை வெல்லவில்லை. ஆட்சி அதிகாரத்தை வலுக்கட்டாயமாக கைப்பற்றியதால் அனைவருக்கும் நீதி கிடைக்கும் என்பது வரலாற்றில் பதிவானதே கிடையாது என்று குறிப்பிட்டுள்ளாா்.


க வேண்டியது அவா்களின் பொறுப்பாகும். அவா்கள் மக்கள் மனதை வெல்லவில்லை. ஆட்சி அதிகாரத்தை வலுக்கட்டாயமாக கைப்பற்றியதால் அனைவருக்கும் நீதி கிடைக்கும் என்பது வரலாற்றில் பதிவானதே கிடையாது என்று குறிப்பிட்டுள்ளாா்ா


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

லாக்டவுனில் அதிகமாக ஆபாச படம் பார்த்த இளைஞர்கள் – அதிர்ச்சி தகவல்

Admin

காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு மோசடி வழக்கில் சிறை! – நடந்தது என்ன?

Admin

ஊக்கமருந்து சோதனையில் சீனா வீராங்கனை :மீராபாய் சானுக்கு தங்கம் கிடைக்குமா?

Admin

பிப்ரவரி 21: உலகத் தாய்மொழிகள் தினம் உருவாக இந்தியாதான் காரணம் தெரியுமா?

Pamban Mu Prasanth

ஆப்கானில் ஆட்சியமைக்கும் தாலிபான்கள் : பதவி விலகும் அதிபர்

Admin

பெயர் மாற்றம் செய்யப்படும் “ஆப்கானிஸ்தான்” -தாலிபான் அதிரடி அறிவிப்பு

Admin

கச்சேரி மேடையான சலூன் கடை : வைரலாகும் வீடியோ!

Admin

மனித ரத்தத்திலும் நுழைந்த பிளாஸ்டிக்! – உலகை உலுக்கிய ஆய்வு முடிவு!

விண்வெளியில் தனக்கென தனி சாம்ராஜயம்.. ஆய்வு கூடத்திற்கு 3 வீரர்களை அனுப்பியது சீனா

Admin

வெடித்த மேகன் மார்கல்… விளக்கம் கொடுக்கும் இங்கிலாந்து ராணி… நடந்தது என்ன?

Admin

அதிகரித்த கொரோனா: பிரான்சில் மீண்டும் ஊரடங்கு

Admin

ஆப்கானில் போராளி குழுக்களுடனான சண்டையில் 600 தாலிபான்கள் பலி

Admin

Leave a Comment