பிரபல நடிகை கங்கனா ரனாவத், வேலை இல்லாத காரணத்தால் கடந்த வருட வருமானவரியின் பாதித்தொகையை செலுத்த முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனாவத். இவர் தனது வருமானத்தில் 45 சதவீதத்தை வரியாக செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் கொரோனாவிலிருந்து மீண்ட அவர், கொரோனா கட்டுப்பாடு காரணமாக படப்பிடிப்பின்றி வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், வேலை இல்லாததால், அரசுக்கு செலுத்த வேண்டிய வரியில் பாதியை மட்டுமே செலுத்தி இருப்பதாகவும், வரி செலுத்துவதில் தாமதம் ஏற்படுவதால் தனக்கு வட்டிக்கு மேல் வட்டி போடப்படுவதாகவும் கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராமில் வேதனையுடன் பதிவிட்டிருந்தார்.
மத்திய அரசுக்கு ஆதரவாக தொடர்ந்து பதிவிட்டு வந்த கங்கனா ரனாவத் முதன்முறையாக இப்படி ஒரு பதிவை இட்டுள்ளது பாலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.
கங்கனா நடிப்பில் பன்மொழியில் உருவாகியுள்ள தலைவி திரைப்படம், கொரோனா காரணமாக திரையிடுவதில் தாமதமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
– மூவேந்தன்