கரும்பூஞ்சை நோய்க்கு அளிக்கப்படும் ஆம்போடெரிசின்- பி மருந்துக்கு ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன் மருத்துவ பொருட்கள் மீதான ஜி.எஸ்.டியில் இருந்து வரிவிலக்கு அளிக்கபடுவதாக அறிவித்தார்.
நிதியமைச்சரின் புதிய சலுகைகள்:
கொரோனா சிகிச்சைக்கு பயனபடும் ரெம்டெசிவிர் மருந்திற்கு ஜிஎஸ்டி 12 -ல் இருந்து 5 சதவிதம் ஆக குறைப்பு.
கொரோனா சிகிச்சைக்கான Tocilzumab மருந்துக்கும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு
ஆக்சிஜனுக்கான ஜிஎஸ்டி 12 சதவிதத்தில் இருந்து 5% ஆக குறைப்பு
சானிடைசர், வெப்பநிலை பரிசோதனை கருவி, பல்ஸ் ஆக்சி மீட்டர் கொரோனா தடுப்பூசிகளுக்கும் 5% ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கபடுவதாக நிதியமைச்சர் கூறினார்.
- மூவேந்தன்