திருநங்கைகளுக்கு இரண்டாம் தவணையாக 2,000 ரூபாய் நிவாரணம் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மூன்றாம் பாலினத்தவருக்கு இரண்டாம் தவணையாக 2,000 ரூபாய் நிவாரணம் வழங்குவதற்காக 1 கோடியே 72 லட்ச ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் உத்தரவின்படி கொரோனா நிவாரணத்தொகையாக ஏற்கனவே தமிழக அரசு குடும்ப அட்டை வைத்திருக்கும் இரண்டாயிரத்து 956 பேருக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.
மேலும் குடும்ப அட்டை இல்லாத திருநங்கைகள் வாரியத்தில் பதிவு செய்திருந்த 8,493 பேருக்கு தலா 2,000 ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இரண்டாவது தவணையாக 8,591 திருநங்கைகளுக்கு தலா 2,000 ரூபாய் வழங்குவதற்கு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்