கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் ஒலிம்பிக் போட்டித் தொடர் இந்தாண்டு ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டிக்காக ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகள், அதிகாரிகள் அடங்கிய அணி ஜப்பானை நோக்கி படையெடுத்த வண்ணம் இருக்கிறது.
போட்டியில் பங்கேற்பவர்கள் தங்குவதற்கு நவீன வசதிகளுடன் கொரோனா கட்டுப்பாட்டு வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் கிராமம் அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனைக்கு பிறகு ஒவ்வொரு அணியினரும் ஒலிம்பிக் கிராமத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் அறையில் தங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கவைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு நடத்தப்பட்ட வழக்கமான பரிசோதனையில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அந்த நபர் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள விடுதி ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடதப்பட்டது. இதில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதியானது.
இதனையடுத்து முதல்முறையாக ஒட்டு மொத்த வீரர்களும் தங்கும் ஒலிம்பிக் கிராமத்திலேயே கொரோனா தொற்று ஊடுருவி இருப்பது பரபரப்பையையும், அச்சத்தையும் ஏற்படுத்திய நிலையில்ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இருவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.