குஜராத் மாநிலத்தில் ஆம்லெட்டில் ஃபாண்டா குளிர்பானத்தை பயன்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாக அசைவ உணவகங்கள் நாம் போனால் நாம் விரும்பி சுவைக்கும் உணவாக இருப்பது ஆன்லெட் தான் எனபதை அசைவ உணவு பிரியர்கள் மறக்கமுடியாது. பொதுவாக ஆம்லெட்டில் பல வகைகள் உள்ளன ஏன் சைவ ஆம்லெட் என்று கூட உள்ளது.
இந்த நிலையில் குஜராத் மாநிலம், சூரத் நகரில் இயங்கி வரும் ஒரு ரோட்டு கடையில் தயார் செய்யும் ஆம்லெட்டில் முட்டையுடன் சேர்த்த பொருள் தான் சமூக வலைதளங்களில் டிரென்டிங் ஆகி வருகிறது.
முட்டையுடன், வெங்காயம், மசாலப்பொடிகள், புதினா சட்னி போன்றவற்றுடன் ஃபான்டா குளிர்பானத்தையும் கலந்து தயாரிக்கப்படுகிறது. இந்த ஆம்லெட் ரூபாய் 250-க்கு விற்கப்படுகிறது.
இந்த ஆம்லெட்டை உணவுப் பிரியர்கள் நீ, நான் என்று போட்டிப்போட்டு வாங்கி உண்பதால் விற்பனை படுஜோராக இருப்பதால் உணவக உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த ஃபான்டா சேர்த்த ஆம்லெட் மட்டுமல்லாமல், முட்டை டிக்கா மற்றும் முட்டை கலக்கி என புதிய உணவு முறைகளை இவர்கள் அறிமுகபடுத்தியிருப்பதால் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் தற்போது ஃபாண்டா ஆம்லெட்வீடியோ இணையத்தை கலக்கிவருகின்றது.
ஃபான்டா ஆம்லேட் தெரியுமா? வைரலாகும் வீடியோ