பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

SHARE

ராஜீவ்காந்தி வழக்கில் கைதான பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை விடுத்தார்.

இதையேற்ற தமிழக அரசு பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது. இதைத்தொடர்ந்து, கடந்த மே மாதம் 28-ம் தேதி ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு பேரறிவாளன் வந்தார்.

தற்போது சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு பேரறிவாளன் மருத்துவ சிகிச்சை எடுத்த நிலையில், ஜூன் மாதம் 28-ம் தேதி மீண்டும் சிறைக்கு திரும்பியபோது, மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், ஜூலை 28-ம் தேதி (நாளையுடன்) பரோல் முடிவடைதால் பேரறிவாளன் சென்னை புழல் சிறைக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகளை காவல் துறையினர் மேற்கொண்டு வந்தனர்.

இதற்கிடையே, பேரறிவாளனின் பரோல் காலத்தை மேலும் நீடிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு விடுத்த கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது

ப்ரோல் காலத்தை பேரறிவாளன் இதுவரை என்னென்ன விதிமுறைகளை கடைப்பிடித்து வந்தாரோ அதையே பின்பற்ற வேண்டும் என சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை…

Admin

மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு? இதையும் சொல்வாங்களா?

Admin

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஏ.கே.ராஜன் குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்பிப்பு!

Admin

தமிழ்நாடு பட்ஜெட்: ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்

Admin

அமெரிக்காவில் 80% டெல்டா கொரோனா வெளியான அதிர்ச்சி தகவல்!

Admin

தலைமறைவாக இருந்த யூடியூபர் மதன் கைது

Admin

’’இனிமே ஞாயிறு , திங்கள் வந்தால் நமக்கென்ன ’’ – மோடியை கலாய்த்த ராகுல் !

Admin

மேலும் பல தளர்வுகளுடன் ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு

Admin

மகசூல் – பயணத்தொடர் – பகுதி 9

Pamban Mu Prasanth

தேர்தல் தேதி நாங்க சொல்லல: பரவும் பொய்யை நம்பாதீங்க – தேர்தல் ஆணையம்

Pamban Mu Prasanth

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஆலோசனை..!!!

Admin

ஒலிம்பிக்கிலும் இனவெறி தாக்குதல்.. மைதானத்தை விட்டு வெளியேறிய வீரர்கள்!

Admin

Leave a Comment