உலக பணக்காரர் எலான் மஸ்க் போட்ட ஒரு லைக்கால், சென்னையைச் சேர்ந்த நிறுவனத்துக்கு ஏழரை கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது.
கருடா ஏரோ ஸ்பேஸ் என்ற சென்னையில் இயங்கி வரும் நிறுவனம் ட்ரோன் தயாரிப்பில் ஈடுபட்டுவருகிறது. இந்த நிறுவனம் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், உள்நாட்டிலேயே ட்ரோன் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, அக்னீஸ்வர் ஜெயபிரகாஷ் என்பவரால் கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் உலக பணக்கார்களில் ஒருவரான எலான் மஸ்க் கருடா ஏரோஸ்பேஸ் குழுவினர், சிங்கப்பூரில் உள்ள சூரியசக்தி மின் உற்பத்தி மையத்தில் உள்ள, 1 லட்சத்துக்கும் அதிமான சோலார் பேனல்களை பராமரிக்க, தங்களது ட்ரோன் பயன்படுத்தப்படுவதாக கூறி அந் நிறுவனத்தின் தலைவர் ஜெயபிரகாஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதற்கு, உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் லைக் செய்துள்ளார், இதனால் கருடா ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்திற்கு ஏழரைக் கோடி ரூபாய் முதலீடு செய்ய லண்டனைச் சேர்ந்த நிறுவனம், முன்வந்துள்ளதாக கருடா ஏரோ ஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எலான் மஸ்க் ட்விட்டால் பலரது வாழ்க்கையும் மாறியுள்ளது. ஆனால் அவரது லைக்கால் கோடியில் ஒரு முதலீடு கிடைத்துள்ளது வர்த்தக உலகினை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.