மாநகர பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணம் செய்வது தொடர்பாக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பேருந்திற்காக நிற்கும் போது, ஒரு பயணியாக இருந்தாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச்செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உரிய நிறுத்தத்தில் மட்டுமே பேருந்தை நிறுத்த வேண்டும், பேருந்தில் இடமில்லை என மகளிர்களை பேருந்தில் இருந்து இறக்கக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வயது முதிர்ந்த மகளிருக்கு இருக்கையில் அமர உதவிபுரிய வேண்டும் என்றும், பெண் பயணிகளுடம் எரிச்சலாகவோ, கோபமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்