“தெரியாது…தெரியாது” – மதுரை எய்ம்ஸ் குறித்து மத்திய அரசின் அதிர்ச்சி பதில்

SHARE

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பதில் அளித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. பின் அதற்காக 2018 ஆம் ஆண்டு மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு 2019 ஜனவரி 27 ல் அடிக்கல் நாட்டப்பட்டது.

அடிக்கல் நாட்டும் போது 45 மாதங்களில் கட்டுமான முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 31 மாதங்கள் நிறைவடைந்துவிட்டது.

எனினும் சுற்றுச்சுவரை தவிர வேறு கட்டுமான பணிகள் எதுவும் இன்னும் தொடங்கவில்லை.இதனிடையே திட்டக் அமலாக்க குழுவிற்கான பதவிகள் உருவாக்கப்பட்டு மதுரை எய்ம்ஸ்க்கு நிர்வாக இயக்குநர், துணை இயக்குநர், கண்காணிப்பு பொறியாளர், நிர்வாக அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்று தெரியாது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் ஒருவர் எழுப்பியுள்ளார். அதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் “தெரியாது” என பதிலளித்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மாணவிக்கு கொரோனா… ஒட்டுமொத்த ஸ்கூலுக்கும் சோதனை

Admin

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த ஆசிரியை… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

Admin

கூட்டணி கட்சிகள் குறித்து பொதுவெளியில் விமர்சனம் செய்யக்கூடாது..!!

Admin

இளைஞர்களின் எனர்ஜி டானிக்..வீரப்பனுக்கு சிம்மசொப்பனம் … யார் இந்த சைலேந்திர பாபு ஐபிஎஸ்?

Admin

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவச உணவு – அமைச்சர் அறிவிப்பு

சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமி காலமானார்

அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட 34 இன்ஸ்பெக்டர்கள்… டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு

Admin

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஆலோசனை..!!!

Admin

பா.ரஞ்சித் மீதான வழக்கு: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

Admin

திடீரென்று முடங்கிய தமிழக அரசின் இ-பதிவு இணையதளம்!

Admin

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது – தேமுதிக

பழனிசாமி தலைமையில் கூட்டம்… சசிகலாவுக்கு எதிராக தீர்மானம்

Admin

Leave a Comment