தமிழக முதல்வருக்கு இயக்குநர் ஷங்கர் நன்றி..!!

SHARE

தனது மகளின் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் ஷங்கர்.

இந்தியாவின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ஷங்கர். தமிழில் எந்திரன், இந்தியன், அந்நியன் போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் ஷங்கர். ராம் சரண் படம், அந்நியன் ஹிந்தி ரீமேக், இந்தியன் 2 என தற்போது 3 படங்களை இயக்கி வருகிறார் ஷங்கர்.

அவரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இளம் கிரிக்கெட் வீரரான ரோகித்தை, ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டார். இதில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரு சில முக்கிய பிரபலங்கள் மட்டும் கலந்துகொண்டனர். இந்த திருமண நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் நடிகரும், திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் தனது மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அவருடைய ஆசிர்வாதம் மணமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகவும், அந்த அருமையான நிகழ்வை என்றும் தங்களால் மறக்க முடியாது என்றும் ஷங்கர் கூறியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தை அதிர வைத்த ‘சோளகர் தொட்டி’ – நாவல் மதிப்புரை

CSK vs RCB: அரசு என்ன சொன்னாலும் நம்பி விட வேண்டுமா?

Pamban Mu Prasanth

கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கைப் பயணம்… – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!.

உற்சாக வாக்கிங்… திறக்கப்பட்ட டீக்கடைகள்… இன்று முதல் புதிய தளர்வுகள் அமல்…

Admin

தமிழகத்தில் உள்ள 32 சுங்கச்சாவடிகளை நீக்க நடவடிக்கை – அமைச்சர் எ.வ.வேலு

Admin

கீழடியில் கிடைத்த சிற்பம் – ஆணா? பெண்ணா?

Admin

வைரலான அணில் சர்ச்சை… புகைப்படத்தோடு பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

Admin

புதிய கல்விக் கொள்கை வேண்டாம்…. புறக்கணித்த தமிழக அரசு!

சட்டம் என்பது குரல்வளையை நெரிப்பதற்காக அல்ல… நடிகர் சூர்யா

Admin

அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட 34 இன்ஸ்பெக்டர்கள்… டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு

Admin

COWIN இணையத்தில் தமிழ் மொழி சேர்ப்பு..! ஆனாலும் 12ஆம் இடம்தான்!.

Admin

கொமதேக நாமக்கல் வேட்பாளர் மாற்றம்… சாதிய பேச்சுதான் காரணமா?

Admin

Leave a Comment