இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் திட்டத்தை கொண்டு வர ரிசர்வ் வங்கி தீவிரம் காட்டி வருகிறது.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி எனப்படும் டிஜிட்டல் ரூபாயை பயன்படுத்த ரிசர்வ் வங்கி விதித்திருந்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.
ஏற்கனவே அமெரிக்கா டிஜிட்டல் டாலர் திட்டத்தில் பணியாற்றி வரும் நிலையில் சீனா, ஐரோப்பா போன்ற நாடுகளும் சமீபத்தில் டிஜிட்டல் ரூபாய் திட்டத்தில் இணைந்தன.
இதனிடையே இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் ரூபாய் திட்டத்தைப் படிப்படியாக நடைமுறைப்படுத்தும் திட்டத்தை வகுத்து வருகிவதாக அதன் துணை கவர்னர் டி.ரபி சங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் விரைவில் இது சோதனை திட்டமாக அறிமுகமாகும் என்றும்,டிஜிட்டல் ரூபாய் பயன்பாடு, சேமிப்பு, பரிமாற்றம் என அனைத்திற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் வரைமுறையை உருவாக்கி வருகிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.