ஐபிஎல் டி 20 இறுதிப் போட்டியில் தோனி செய்த செயல் வைரல் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது.
ஐபிஎல்லின் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி 4 வது முறையாக கோப்பையையும் வென்றது.
கடந்த சீசனில் ஃபிளே ஆஃப் சுற்றுகே தகுதி பெறாமல் முதலில் வெளியேறிய அணி சென்னை சூப்பர் கிங்ஸ். அப்போ தோனி சொன்ன வார்த்தைகள், ’முன்பைவிட வலிமையோடு திரும்பி வருவோம்’ அப்படிங்கிறது தான். அதப் இப்போ உண்மையாக்கி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். அதனால தான் சார் அவர் ’தல’…
சென்னை சூப்பர் கிங்ஸின் போட்டி என்றாலே எப்பவும் பரபரப்பும், அதிரடிக்கும் குறைச்சல் இல்லை என்றே சொல்லலாம். அதே போன்ற பரபரப்புடன் தான் இறுதி போட்டியும் நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஒவர்களில் 192 ரன்கள் எடுத்திருந்தது. இந்த இமாலய இலக்கை எட்ட களம் இறங்கிய கொல்கத்தா அணி, ஆரம்பம் சரியாக அமைந்தாலும், ஒரு விக்கெட் விழுந்தவுடன் அடுத்தடுத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறியதால், 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்த பரபரப்பான போட்டியில் தோனி செய்த செயலை இப்போது ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். கொல்கத்தாவின் ஃபீல்டிங்கின் போது த்ரிப்பாட்டிக்கு காலில் அடிப்பட்டதால், அவர் ஆட்டத்தின் பாதியிலேயே வெளியேறினார். பிறகு பேட்டிங் செய்வாரா? – என்பது கேள்விக்குறியானது.
ஆனால் கொல்கத்தாவின் பேட்டிங்கில் தொடர் விக்கெட் வீழ்ச்சியால், 15ஆவது ஓவருக்கு ஆட வந்தார் த்ரிப்பாட்டி.
காயத்துடன் ஆடி 2 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது த்ரிப்பாட்டியால். அவர் அவுட்டாகி வெளியேறும் போது தோனி திரிப்பாட்டிக்கு ஆறுதல் கூறி முதுகில் தட்டிக் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
– சே.கஸ்தூரிபாய்