இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தோனி, தனது மகளுக்கு பரிசளித்த குட்டி குதிரையுடன் ரேஸ் ஓடுவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியாவில் கொரோனா காரணமாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் வீரர்கள் தங்களது வீடுகளில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அந்த வகையில் சிஎஸ்கே கேப்டன் தோனி விடுமுறையை நாட்களை வீட்டில் செலவழித்து வருகிறார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் எம்எஸ் தோனி அவ்வப்போது சில வீடியோக்களை பதிவிடுவார். அந்த வகையில் தனது பண்ணை இல்லத்தில் உள்ள செல்லப்பிராணியான ‘ஷெட்லாண்ட் போனி’ என்ற குட்டிக் குதிரையுடன் அவர் ஓடிப்பிடித்து விளையாடுவதை அவரது மனைவி சாக்ஸி வீடியோவாக எடுக்க, அதை தோனி பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் குதிரைக்கு இணையாக ஓடும் தல தோனியை இணைய வாசிகள் புகழ்ந்து வருகின்றனர்.
இந்தக் குதிரையை தோனி தனது மகள் ஜீவாவுக்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.