இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனாதற்போது 85 நாடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து கொண்டே வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் என பல நாடுகளில் உருமாறிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த உருமாறிய வைரஸ்கள் பற்றி உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படி:
இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் ஆல்பா, 170 நாடுகளிலும்
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ் பீட்டா, 119 நாடுகளிலும்,
பிரேசில் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ் காமா, 71 நாடுகளிலும் பரவி உள்ளது.
இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா தற்போது உலகம் முழுவதும் 85 நாடுகளில் பரவியுள்ளது.
அவற்றில் 11 நாடுகள் கடந்த 2 வாரங்களுக்குள் டெல்டா கொரோனாவைக் கண்டறிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.