ஆந்திராவில் கொரோனாவை கட்டுப்படுத்த மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு.
கொரோனாவின் இரண்டாம் அலையின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த கடந்த 5ம் தேதி முதல் 17ஆம் தேதி வரை ஆந்திராவில் முழு ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நாளையுடன் அந்த ஊரடங்கு நிறைவடைய இருந்த நிலையில், மே 31மஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப் படுவதாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தற்போது அறிவித்துள்ளார்.
ஆந்திராவில் ஊரடங்கின்போது காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அத்தியாவசியக் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணிக்கு மேல் மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
- பிரியா வேலு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்