தமிழகத்தில் குழந்தைகளுக்கான கொரோனா வார்டுகள் கார்ட்டூன் படங்கள் மூலம் அமைக்கப்பட்டுவருகிறது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவல் குறைந்து வரும் நிலையில் மூன்றாவது அலை பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த மூன்றாவது அலை கொரோனா குழந்தைகளை அதிகம் பாதிக்கும் வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை, மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பட்டுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் குழந்தைகளுக்கு பிடித்த டோரா, மிக்கி மவுஸ் போன்ற கார்ட்டூன் படங்களை கொண்டு அலங்கரித்துள்ளனர்.
குழந்தைகள் மனதை உற்சாகப்படுத்த இந்த கார்ட்டூன் படங்கள் உதவும் என கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்