கொரோனா மூன்றாம் அலை வந்துவிட்டது!: நடுக்கத்தில் தென்னாப்பிரிக்கா!.

SHARE

தென் ஆப்பிரிக்காவில் உள்ள காவ்டெங் மாகாணத்தில் கொரோனா மூன்றாவது அலை பரவி வருவதாக அந்த மாகாண பிரதமர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

காவ்டெங், தென்னாப்பிரிக்கா.

தென் ஆப்ரிக்காவின் காவ்டெங் மாகாண பிரதமர் டேவிட் மக்குரா, நாடு முழுவதும் கொரோனா மூன்றம் அலை பரவவில்லை என்றாலும் காவ்டெங் மாகாணத்தில் அது தீவிரமாக பரவ தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் அந்த மாகாணத்தில் 600 ஆக இருந்த தொற்று இரண்டு நாட்களில் 1200 ஆக அதிகரித்துள்ளது எனவும் இரண்டு நாட்களிலேயே இருமடங்காக தொற்று பரவுவது அபாயகரமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காவ்டெங் மாகாணத்தில் கடந்த பல வாரங்களில் முதல்முறையாக கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் 3,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16.05 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை 15.20 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

காவ்டெங் மாகாணம் தென்னாப்பிரிக்காவின் முக்கிய பொருளாதார மண்டலம்  எனவே கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையிலும் பொருளாதார பிரச்சனை காரணமாக அங்கு பொது முடக்கம் அமல்படுத்தப்படவில்லை. 

‘மருத்துவக் கட்டமைப்பில் பின்தங்கியுள்ள தென் ஆப்பிரிக்காவில் ஊரடங்கு மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும். ஆனால் பொருளாதாரத்தைக் காரணம் காட்டி, பொது முடக்கத்தை அமல்படுத்தாமல் இருப்பது நாட்டை பெரும் சிக்கலில் தள்ளும்’ என இதனை மருத்துவ வல்லுநர்கள் விமர்சித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆப்கானில் உள்ள இந்தியர்கள் விரைவில் மீட்பு: இந்திய வெளியுறவுத்துறை தகவல்

Admin

தங்கப்பதக்கம் வென்ற எலி… பணியில் இருந்து ஓய்வு

Admin

உங்களை மன்னிக்க மாட்டோம்.. கண்டிப்பா உங்களை வேட்டையாடுவோம் – ஆப்கன் குண்டுவெடிப்புக்கு அமெரிக்க அதிபர் கடும் எச்சரிக்கை

Admin

கொரோனா இரண்டாம் அலை – தற்காத்துக் கொள்வது எப்படி?

3-வது திருமணத்துக்கு தயாரான பிரபல பாடகி..!!

Admin

ஆப்கானில் ஓசாமாவை அழிப்பதே எங்கள் வேலை .. என்னோடு இந்த போர் முடியட்டும்: அமெரிக்க அதிபர் ஜோபைடன்

Admin

இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: 10ஆவது முறையாக நடால் வெற்றி

தடுப்பூசியை வீணாக்காதீர்கள்: பிரதமர் மோடி அறிவுரை!

ஒரே நாளில் 1000 சிறார்களுக்கு கொரோனா!.

பொழுதுபோக்குக்காக பறப்பவர்களை விண்வெளி வீரர்கள் என கூறமுடியாது :கடுப்பான அமெரிக்கா!

Admin

முதல்வரிடம் ரூ.30 லட்சம் வழங்கினார் நடிகர் விக்ரம்

கொரோனாவை கையாளத் தவறிய ஜப்பான் பிரதமர் பதவி விலக முடிவு..!

Admin

Leave a Comment