கொரோனா இரண்டாம் அலை – தற்காத்துக் கொள்வது எப்படி?

SHARE

  • டாக்டர்.க.குழந்தைசாமி, பொது சுகாதார வல்லுநர்

 கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது? 

பேசும் போது, சிரிக்கும் போது, இருமும் போது, தும்மும் போது மூச்சுத் திவலைகளுடன் கொரோனா வைரஸ் காற்றில் கலந்து அருகில் உள்ளவர்களுக்கு பரவுகிறது.

காற்றில் பரவிய கிருமிகளும் நோய்த் தொற்று ஏற்பட்டவர்களின் கைகளில் உள்ள கிருமிகளும் கதவு கைப்பிடிகள், மேஜை, ஸ்விட்சுகள், படிக்கட்டு கைப்பிடிகள், லிஃப்ட், நாற்காலிகள், வாகன இருக்கைகள் முதலான பல்வேறு வகையான பொருட்களின் மீது படிகின்றன. இது போன்ற இடங்களைத் தொட்டு விட்டு கைகளைக் கழுவாமல் கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடும்பொழுது தொற்று ஏற்படுகிறது. 

 கொரோனா வைரஸ் தொற்றை எவ்வாறு தடுப்பது? 

கைகளை அடிக்கடி சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும்.

முக கவசம் அணிய வேண்டும்.

சக மனிதர்களிடமிருந்து இரண்டு மீட்டர் தூரம் விலகி இருக்க வேண்டும்.

கைகள் அடிக்கடி படக்கூடிய இடங்களை கிருமி நாசினி கொண்டு துடைத்து தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வீடுகள், பணிபுரியும் இடங்கள், கடைகள் மற்றும் மக்கள் வருகை புரியும் இடங்களை  ஜன்னல் கதவுகளைத் திறந்து காற்றோட்டமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

 உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரித்துக் கொள்வது?

நெல்லி, கொய்யா, எலுமிச்சை, காய் கறிகள், பழவகைகள், முட்டை, பால் போன்ற வைட்டமின்களும் தாது உப்புகளும் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

வைட்டமின்கள் மற்றும் Zinc மாத்திரைகள் பத்து நாட்கள் எடுத்துக் கொள்ளலாம். கபசுர குடிநீர் குடிக்கலாம். பிராணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு மணி நேரம் உறங்க வேண்டும்.

புகைப் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.

சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், ஆஸ்த்மா, சிறுநீரக பிரச்சினை போன்ற இணை நோய்களுக்கு உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

 கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

சளி, தும்மல், இருமல், காய்ச்சல், தொண்டைவலி, கடுமையான தலைவலி, உடல்வலி, வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

பல்ஸாக்சி மீட்டர் வைத்து ஆக்சிஜன் அளவை மூன்று நான்கு முறைகள் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

ஆக்சிஜன் அளவு 95 சதவீதத்திற்கும் கீழாகக் குறைந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்வது முக்கியம்.

ஆக்சிஜன் அளவு மிக மிக அபாயகரமான அளவான எழுபது சதவீதத்திற்கும் கீழாகக் குறையும் போது தான் மூச்சுத்திணறல் ஏற்படும். 

மூச்சுத்திணறல் ஏற்பட்டால் மருத்துவரிடம் சென்றால் போதும் என தவறாக நினைத்துக் கொண்டு காலதாமதமாக மருத்துவமனைக்கு செல்வது உயிரிழப்பை ஏற்படுத்தும்.

 இரண்டாவது அலை ஏன் தீவிரமாக உள்ளது?

முதல் அலையின் போது பெரும்பாலும் ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கே தொற்று அதிகமாக ஏற்பட்டது.

தற்போது தொற்று ஏற்படாத அனைவருக்கும் தொற்று ஏற்படுவதால் இணை நோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

 தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் உள்ள அபாயகரமான இடங்கள்

1. காற்றோட்ட வசதி இல்லாத கடைகள், வணிக வளாகங்கள் முதலான இடங்கள் (crowded, closed and contained spaces)

2. மருத்துவமனைகள்

தேவையில்லாமல் மருத்துவ மனைகளுக்கு போகக்கூடாது. 

உற்றார் உறவினர்களைப் பார்க்க மருத்துவ மனைகளுக்கு போகக் கூடாது. 

பிரசவத்தின் போது ஒரேயொரு பெண் துணை (Birth Companion)  உடன் இருந்தால் போதுமானது.

உதவி தேவைப்படின் ஆரோக்கியமாக இருக்கும் வயது குறைந்த உறவினர் ஒருவர் உடனிருக்கலாம்.

3. திரையரங்குகள், கூட்ட அரங்குகள்

4. காற்றோட்டம் இல்லாத கூட்டம் அதிகமாக உள்ள ஹோட்டல்கள்

 பாதுகாப்பான இடங்கள் 

திறந்த வெளி கடைகள், வெளியே நின்று கொண்டு பொருள்கள் வாங்கும் வகையில் உள்ள மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், உழவர் சந்தை, வாராந்திர சந்தைகள், திறந்தவெளி ஹோட்டல்கள் முதலான காற்றோட்டம் மிகுந்த இடங்கள் பாதுகாப்பானவை.

 எச்சரிக்கை

நிலைமையின் தீவிரத்தை பொது மக்கள் உணர்ந்து பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஓய்வின்றி உழைக்கும் மருத்துவர்கள்,  செவிலியர்கள், பொது சுகாதாரத் துறையினர் மற்றும் முன்களப் பணியாளர்களின் கடினமான சூழ்நிலையையும் மனதில் கொண்டு, அவர்களை மனச்சோர்விற்கு ஆளாக்காமல் ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

முதல்வரிடம் ரூ.30 லட்சம் வழங்கினார் நடிகர் விக்ரம்

இன்று நெல்சன் மண்டேலா தினம்!. மண்டேலா குறித்து அறியப்படாத 20 தகவல்கள்…

15 கோடி மக்களுக்கு கொரோனா… அபாயத்தை உணர்த்தும் புள்ளிவிவரம்.

டி.வி.இல்லாத வீட்டில் இருந்து கூகுளின் தலைமைப் பதவிக்கு… சுந்தர் பிச்சையின் தன்னம்பிக்கை வரலாறு!

Admin

முன்பே டினிட்டஸ் குறித்து சொன்னார் அஜித்? நாமதான் கவனிக்கல

Admin

கொரோனா தடுப்பு நடவடிக்கை: 3 மாவட்டங்களில் முதல்வர் நாளை ஆய்வு

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது – தேமுதிக

குழந்தைகளுக்கான வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்கிய ஆயுஷ் அமைச்சகம்

Admin

கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் தூக்கி வந்த மருமகள்!.

கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்!

தமிழும் காதலும்..! – காதலர்தின சிறப்புக் கட்டுரை.

இரா.மன்னர் மன்னன்

உலகின் மிகச் சுவையான மாம்பழ வகை எது?

Leave a Comment