இந்தியாவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 6,148 பேர் கொரோனா தொற்றிற்கு பலியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகின இதற்கான கடந்த சில நாட்களாக இறப்பு விகிதம் குறைந்து வரும் நிலையில் இன்றும் மட்டும் திடீரென்று உயர காரணம் என்ன? காண்போம் இந்த தொகுப்பில்.
இந்தியாவில் இன்று அதிகபட்சமாக கொரோனா தொற்றால் பலியானவர்கள் 6,148 என்ற எண்ணிக்கை வெளியானது. ஒரே நாளில் இவ்வளவு பெரிய மாற்றமா என்ற கேள்வி அனைவருக்கு எழலாம் காரணம் இது தான், பீகார் மாநிலத்தில் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை மறுதணிக்கை செய்யப்பட்டதே.
பீகார் அரசு கொரோனா பாதிப்பு நிலவரங்களை குறைத்துக் காட்டுவதாக புகார் எழுந்த நிலையில், பாட்னா உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாத உயிரிழப்புகளை தணிக்கை செய்ய உத்தரவிட்டது.
ஆகவே மறு தணிக்கை செய்ததில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் கொரோனா தொற்றிற்கு 1,600 பேர் உயிரிழந்தது தெரியவந்தது.
முன்னதாக பீகார் அரசு 5,500 பேர் உயிரிழந்ததாக கூறியிருந்தது தற்போது தணிக்கைக்குப் பிறகு அனைத்து மாவட்டங்களிலும் 72 சதவீதம் அதிகமான உயிரிழப்புகள் இருப்பதாக தணிக்கை ஆய்வில் உள்ளது ஆக தினசரி இறப்புகளை பீகார் அரசு மறைத்ததால், தற்போது தனது புள்ளி விபரத்தில் அதிகரித்து காட்டியதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
– மூவேந்தன்