தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சபட்ச வேகத்தைத் தொட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 28,897 பேருக்கு கொரோனா பாதிப்பு புதிதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு ஒரு நாளைக்கு 30,000 என்ற எண்ணிக்கையை நெருங்கி வருகிறது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் 151 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 85 பேரும் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர்.
சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 7,130 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகமெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,012 பேர் 12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் என்பது கூடுதல் அதிர்ச்சியாக உள்ளது.
அதிகரிக்கும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் வெளி இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்து, கூடுதல் பாதுகாப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகின்றது.
- நமது நிருபர்