பாரதிய ஜனதாவையும் கண்டு அஞ்சும் காங்கிரஸ்காரர்கள் கட்சியைவிட்டு தாராளமாக வெளியேறலாம் என நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல்காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப்பிரிவை சேர்ந்த 3,500 உறுப்பினர்களிடம் காணொலிமூலம் பேசிய ராகுல் காந்தி
காங்கிரஸிற்கு தைரியமான தலைவர்கள் கட்சிக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என கூறினார். அதே சமயம் ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகள் காங்கிரஸிற்கு தேவையில்லை என்றும்.
அவர்கள் கட்சியைவிட்டு வெளியேறலாம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸிலிருந்து வெளியேறிய ஜோதிராதித்ய சிந்தியாவை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்