தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூடும் படி தொடக்க கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக தொடக்க பள்ளி இயக்குநரகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் சில பள்ளிகள் நடந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதால், அங்கீகாரம் இல்லாமல் மாணவர்களின் சேர்க்கையுடன் இயங்கிவரும் தனியார் பள்ளிகளை மூடும் படி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் செயல்பட்டு வந்தால், சார்ந்த வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலரே பொறுப்பு என தொடக்கக் கல்வி இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பயிலுகின்ற மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்கும்படி அங்கீகாரம் இல்லாமல் மாணவர்களின் சேர்க்கையுடன் இயங்கிவரும் தனியார் பள்ளிகளை மூடும் படி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
- மூவேந்தன்