பிரம்மபுத்ராவில் அணை கட்டும் சீனா: அதிர்ச்சியில் இந்தியா, வங்க தேசம்

SHARE

நமது நிருபர்

சீனா, இந்தியா, வங்க தேசம் ஆகிய நாடுகளிடையே ஓடும் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே அணை கட்ட உள்ளதாக சீனா தெரிவித்து உள்ளது.

ஆசிய கண்டத்தில் ஓடும் வற்றாத ஜீவநதிகளில் ஒன்று பிரம்ம புத்ரா. இந்தியாவில் ஓடும் நதிகளில் ஆணின் பெயர் கொண்ட ஒரே நதி என்ற பெருமையும் இதற்கு உண்டு. 

தற்போது சீனாவின் தன்னாட்சிப் பகுதியாக உள்ள திபெத்தில் தொடங்கி சீனா வழியாக வந்து, இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் வாயிலாக இந்தியாவுக்குள் நுழைந்து, வங்க தேசம் வரையில் பாயும் பிரம்மபுத்ரா நதியால் 3 பெரிய நாடுகள் பயனடைகின்றன. இந்தியாவின் பல மாநிலங்கள் தங்கள் நீர் வளத்துக்கு பிரம்மபுத்ராவையே நம்பி உள்ளன.

பிரம்மபுத்ரா நதி அருணாச்சல பிரதேசத்தில் நுழையும் இடத்திலேயே ஒரு அணையைக் கட்டி நதியைத் தடுக்கு ஒரு திட்டத்தைக் கடந்த ஆண்டு சீன அரசு வெளியிட்டது. இந்தத் திட்டம் குறித்த எதிர்ப்பை இந்தியாவும் வங்க தேசமும் சீனாவுக்கு தெரிவித்தன. இதனால் தனது முடிவில் இருந்து சீனா பின்வாங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் தற்போது தனது 14ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தை வெளியிட்டுள்ள சீனா, பிரம்ம புத்ரா நதியில் அணையையும் நீர் மின் நிலையத்தையும் கட்ட உள்ளதாக அந்தத் திட்டத்தில் தெரிவித்து உள்ளது.

எனவே இந்த ஆண்டுக்குள் பிரம்மபுத்ராவில் அணை கட்டும் பணிகளைச் சீனா தொடங்கும் என்பது உறுதியாகி உள்ளது. சீனாவின் இந்த அறிவிப்பு இந்தியா, வங்க தேசம் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மேதைகளின் மேதை அம்பேத்கர்! – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

15 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்தது காங்கிரசுக்கு உதவுமா? – முழு பின்னணி என்ன?

Pamban Mu Prasanth

இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: 10ஆவது முறையாக நடால் வெற்றி

திமிருக்கும் அறியாமைக்கும் தடுப்பு மருந்து கிடையாது.. ராகுல் காந்திக்கு ஹர்ஷவர்தன் ட்வீட்

Admin

ஆப்கானில் அதிகரிக்கும் தலிபான்களின் ஆதிக்கம்!

Admin

ஒரே ஒரு வீடியோ தான்.. மீண்டும் மீண்டும் டுவிட்டருக்கு நோட்டீஸ்…

Admin

என் பதிவையே தூக்கிட்டிங்களா.. இனி உங்களுக்கு இடமில்லை .. நைஜீரியாவில் ட்விட்டருக்கு தடை போட்ட அதிபர்

Admin

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கப்போவது கருணாநிதிக்கு தெரியும் – RTI தகவல்

Pamban Mu Prasanth

நாங்கள் இந்தியர்கள் யாரையும் கடத்தவில்லை ..தாலிபான்கள்!

Admin

கங்கை நதியில் கொரோனா வைரஸ் பரவலா..? ஆய்வின் முடிவில் தகவல்

Admin

குஜராத்துக்கு 1000 கோடி: நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி

கொரோனா மருத்துவக் கருவிகள்- ஐ.நா.வின் உதவியை நிராகரித்த இந்தியா!

Leave a Comment