கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கி கணக்கில் வைப்பு நிதியாக 5 லட்ச ரூபாய் செலுத்தும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தக் கொரோனா பாதிப்பால் பல குழந்தைகள், தங்களது தாய் தந்தையை இழந்து தவித்து வருகின்றன. குடும்பத்தின் ஆதாரமாக இருந்து உறவுகளை இழந்து அனாதைகளாக்கப்படும் குழந்தைகளைக் காக்க வேண்டும் என்கிற கோரிக்கை பலராலும் வைக்கப்பட்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து குழந்தைகளின் நலன் கருதி தமிழக அரசு சார்பில் கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து குழந்தைகளின் பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் வைப்பீடு செய்ய முடிவு செய்துள்ளனர். மேலும் அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும்போது, அந்தத் தொகை அந்தக் குழந்தைக்கு வட்டியோடு வழங்கப்படும் என்றும் அறிவித்தது.
இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கி கணக்கில் வைப்பு நிதியாக 5 லட்ச ரூபாய் செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.