தனது அப்பாவை வேலை பார்க்க விடாமல் மீண்டும் மீண்டும் மடிக் கணினியைத் தட்டிவிடும் சுட்டிக் குழந்தையின் காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் பலரும் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்ரனர். சர்வதேச ஆய்வுகள் வீட்டில் இருந்து பணியாற்ருவது என்பது அலுவலகத்தில் இருந்து பணியாற்றுவதை விடக் கடினமானது என்கின்றன. அதில் ஒரு சுமை இருந்தாலும், சில நேரங்களில் அந்த சுமை சுகமாகவும் உள்ளது.
அந்த வகையில் வீட்டில் இருந்து பணியாற்றும் ஒரு தந்தை தனது சுட்டிக் குழந்தையிடம் வேலையைப் பார்க்க விடுமாறு கெஞ்சியும், அதைக் கேட்காத குழந்தை மீண்டும் மீண்டும் மடிக் கணினியைத் தட்டிவிடும் ஒரு காணொலி இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நமது நிருபர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்