ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, கிரிக்கெட் விளையாடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மக்கள் நலன்கருதி பல்வேறு அதிரடி அறிவிப்புகள் நடைமுறைக்கு கொண்டு வந்ததன் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.
கொரோனா நிவாரணம் வழங்குதல் தொடங்கி பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். இதற்கிடையில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, இரண்டு நாள் பயணமாக கடப்பா மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த அவர், கடப்பாவில் உள்ள விளையாட்டு மைதானத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்களுடன் திடீரென ஜெகன் மோகன் ரெட்டியும் கிரிக்கெட் விளையாட தொடங்கினார்.
ஆய்வுப் பணிக்கு வந்த முதலமைச்சர் திடீரென ஆர்வமுடன் கிரிக்கெட் விளையாடியதை பொதுமக்களும், கட்சித் தொண்டர்களும் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். கிரிக்கெட் விளையாடும் ஜெகன்மோகன் ரெட்டியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.