சிலிர்த்து எழுந்த சென்னை சூப்பர் கிங்ஸ்!.

SHARE

ஐபிஎல் லீக்கின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. சென்னை சூப்பர் கிங்ஸ் 45 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. 

வான்கடே, மும்பை.

ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டூப்பிளஸி களம் இறங்கினர். ஆட்டத்தின் 4வது ஓவரிலேயே முஸ்தாபிஃசூரின் பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டானார் கெய்க்வாட். முந்தைய சில போட்டிகளிலும் கெய்க்வாட்டின் ஆட்டம் சொல்லும்படி இல்லை. இதனால் அடுத்த போட்டிகளில் அவர் தொடர்வாரா என்பது, இந்த மேட்ச்சிலே பேசப்பட்டது. ஆனால் டூப்பிளஸி, உனத்கட் டின் ஓவரில் தாறுமாறாக பந்துகளை தூக்கி எறிந்து, 3 பவுண்டரி, 1 சிக்ஸர் என ரன்களை குவித்தார். அவரது ஆட்டமும் அடுத்த வந்த மோரிஸ் பந்துகளில் முடிந்துவிட்டது. பவர்பிளே ஓவரில் மட்டும் 2 விக்கெட்டுகள் போனது. 

அடுத்து வந்த மொயின் அலி, ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி அடித்து, ரன்களை சேர்த்தார். அவரும் திவாட்டியாவின் ஓவரில் அவுட்டாகி சென்றார். ராயுடு ரெண்டு சிக்ஸர் அடித்து சக்காரியா ஓவரில் அவுட்டானார். அதே ஓவரில் ரெய்னாவும் அவுட்டானார். பிறகு ஜடேஜாவும் தோனியும் வந்தனர், சொல்லும்படி ஜடேஜாவும், தோனியும் ஆளுக்கொரு பவுண்டரி அடித்து தோனி சக்காரியாவின் பந்திலும், ஜடேஜா மோரிஸின் பந்திலும் அவுட்டாகினர். ப்ராவோ மோரிஸின் பந்தில் 2 பவுண்டரி அடித்தார். சாம் கர்ரனும் பவுண்டரி, சிக்ஸர் என அடித்து கடைசியாக வந்த முஸ்தாபிஃசூர் ஓவரில் அவுட்டானார்.  அதே ஓவரில் ப்ராவோ சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 120 பந்துகளுக்கு 188 ரன்கள் எடுத்தது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டத்தில் பழைய வேகம் தெரிந்தது. நன்றாக ஆட வேண்டும் என்ற எண்ணம் தெரிந்தது. கெய்க்வாட் தவிர ஆடிய பேட்ஸ்மேன் அனைவருமே பவுண்டரியோ சிக்சரோ அடித்திருந்தனர். இந்த ஆட்டத்தின் மிடில் ஓவர்களில் கொஞ்சம் தொய்வு காணப்பட்டது. பவர்பிளே ஓவர்களிலும் டெத் ஓவரிலும் நன்றாகவே ஆடினார்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக வந்த பட்லர், சாம் கர்ரனின் ஓவரில் பந்துகள் பவுண்டரிகளை விளாசினார். சாம் கர்ரனின் 2ஆவது ஓவரில் வோராவின் விக்கெட் விழுந்தது. அடுத்து வந்த சாம்சன் ஒரு ரன் எடுத்து சாம் கர்ரனின் அடுத்த ஓவரிலேயே அவுட்டானார். சாம் கர்ரன் சூப்பரான 2 விக்கெட்டுகளை பவர்பிளே ஓவரில் எடுத்தார். பவர்பிளேக்கு பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு என்ன ஆனதோ தெரியவில்லை, ரன்களே ஏறாமல் விக்கெட்டுகள் விழத்தொடங்கின. மிடில் ஓவரில் முக்கியமான விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தன. ஆட்டத்தின் 12 வது ஓவரில் ஜடேஜாவின் பந்து வீச்சில் பட்லர் மற்றும் டூபேவின் விக்கெட்டுகள் விழுந்தன. அடுத்த ஓவரில் மொயின் அலி பந்தில் மில்லரும், அவரின் அடுத்த ஓவரில் ரியான் மற்றும் மோரிஸின் விக்கெட்டுகளும் பறிபோயின. இறுதியில் ப்ராவோவின் ஓவரில் 2 சிக்ஸர் அடித்து அவுட்டானார் திவாட்டியா.  ஆட்டத்தின் கடைசி ஓவரில் உனத்கட் அடித்த பந்து ஜடேஜாவுக்கு கேட்ச் ஆனது.

ஜடேஜா மட்டும் நேற்று ரியான், மோரிஸ், உனத்கட், வோரா என நான்கு கேட்ச்களைப் பிடித்தார். கடைசி கேட்ச் பிடிக்கும்போதே மொபைல் ஃபோன் எனக்குதான் என்று செய்கை செய்தார். அதேபோல் அவருக்கே சிறந்த கேட்ச் பிடித்ததற்காக ஃபோன் வழங்கப்பட்டது. முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் 143 ரன்கள் எடுத்து தோற்றது.

– சே.கஸ்தூரிபாய்

ativador office 2016


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கோகோ கோலா வேண்டாம்… தண்ணீர் பாட்டில் போதும்… ரொனால்டோவின் வைரல் வீடியோ

Admin

இந்தியாவில் விளையாட்டு மாறவேண்டும் – தங்க மகன் நீரஜ் சோப்ரா ஆதங்கம்!.

பெண் என்பதால் இடமில்லையா ஆவேசமான நீதிபதி!

Admin

இந்த மருந்துக்கெல்லாம் ஜிஎஸ்டி கிடையாது.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு

Admin

சிலிர்த்து எழுந்த சி.எஸ்.கே… மும்பை இண்டியன்ஸ் அணியை வீழ்த்தியது…

சே.கஸ்தூரிபாய்

8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்… குடியரசுத் தலைவர் அறிவிப்பு

Admin

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழும் இளம்பெண்… கணவன் பிடியிலிருந்து நழுவிய மனைவி

Admin

குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானதா..? எய்ம்ஸ் தலைமை மருத்துவர் விளக்கம்

Admin

பெகாஸஸ் மென்பொருளை மத்திய அரசு வாங்கியதா? இல்லையா? : கேள்விகளால் துளைத்தெடுத்த ராகுல் !

Admin

அடேங்கப்பா.. இவர் பெயர் இருந்தாலே போதும் ரூ.501 மதிப்புள்ள பெட்ரோல் இலவசம்!

Admin

கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு இணையாக வருமானம் ஈட்டும் நீரஜ் சோப்ரா.!!

Admin

டவ்-தே புயல்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Leave a Comment