வாட்ஸ் -அப்பில் ஒரு நிமிடத்தில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெற்றுகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் சான்றிதழ் வழங்கி வருகிறது. ‘கோவின்’இணையதளத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அளிக்கப்படுகிறது.
தற்போது, மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்வது உட்பட பல்வேறு வகைகளில் இந்த சான்றிதழ் கேட்கப்படுகிறது. இதனால், மக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
கோவின் இணையதளத்தில் இருந்து உடனடியாக இதை டவுன்லோடு செய்வதும் சில சமயங்களில் சிக்கலாக உள்ளது. இந்நிலையில், இந்த சான்றிதழை எளிதாக பெறுவதற்கான வாட்ஸ் அப் வசதியை சுகாதார அமைச்சகம் செய்துள்ளது.
வாட்ஸ்-அப்பில் கொரோனா தடுப்பூசிக்கான சான்றிதழை பெற வழிமுறைகள்:
அதன்படி, +91 9013151515 என்ற எண்ணை தங்கள்து செல்போன்களில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
பின்னர் அந்த எண்ணிற்கு covid certificate என டைப் செய்து வாட்ஸ்அப்பில் அனுப்பவும், செய்தி அனுப்பப்பட்டவுடன், பயனாளிகளுக்கு OTP வரும். அதன்பின் பயனாளிகளுக்கு வந்த OTP-ஐ அனுப்பும்போது, பயனர்கள் தங்களுக்கான கொரோனா தடுப்பூசி சான்றிதழை ஒரு நிமிடத்திற்குள் பெறுவார்கள்.