ரூ.1.3 கோடிக்கு கார்!: குக் வித் கோமாளி குழுவினர் குதூகலம்…

SHARE

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக உள்ள வெங்கடேஷ் பட் பி.எம்.டபிள்யூ கார் வாங்கி உள்ள செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகின்றது.

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபல ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி. தமிழக அளவில் மிக அதிக பார்வையாளர்களைப் பெற்றுள்ள இந்த ஷோவில் இப்போது இறுதிச் சுற்றுக்கான போட்டியாளர்களாக கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர். விரைவில் வைல்ட் கார்டு சுற்றில் வெற்றி பெறப் போகும் நபர் நான்காவது போட்டியாளராக இறுதிச் சுற்றுக்கு செல்ல இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ள நடிகர் புகழ் சமீபத்தில் தனது முதல் காரை வாங்கினார். அதுபற்றிய அவரது காணொலி சமூக வலைத் தளங்களில் வைரலானது. 

இப்போது அந்த நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட் புதிய காரை வாங்கி உள்ளார். பி.எம்.டபிள்யூ பிராண்டைச் சேர்ந்த எக்ஸ்7 கார் அது. விலை 1 கோடியே 30 லட்சம்.

இந்தக் காரை குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு எடுத்து வந்த வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரக்‌ஷன், நிகழ்ச்சியின் கோமாளிகள் புகழ், தங்கதுரை உள்ளிட்டோரை அதில் ஏற்றிச் சென்றார். இதை தங்கதுரை ஒரு வீடியோவாக எடுக்க அந்த வீடியோதான் இப்போது வைரலாகி வருகின்றது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோட்களில் ஒன்றில் வெங்கடேஷ் பட் பேசும்போது, கடின உழைப்பால் அவர் எப்படி மேலே வந்தார் என்பதையும், பள்ளி வகுப்புகளில் 3 முறை தேர்ச்சி பெறாத மாணவரான அவர் உழைப்பால் வெற்றி அடைந்தது பலரும் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டியது என்பதையும் சொன்னார். இப்போது அவர் கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள காரை வாங்கியதால் குக் வித் கோமாளி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நமது நிருபர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

40 திருமணம் கூட செய்துகொள்வேன்: கடுப்பான வனிதா விஜயகுமார்

Admin

தி ஃபேமிலி மேன் 2 தொடரை உடனே தூக்குங்க: அமேசானுக்கு கடிதம் எழுதிய சீமான்

Admin

நயன்தாராவின் தந்தை மருத்துவமனையில் அனுமதி காரணம் என்ன?

Admin

எனக்கு எண்டே கிடையாது: நடிகர் வடிவேலு

Admin

ஷூட்டிங் ஸ்பாட்ல சுகாதார சீர்கேடா.. நடிகர் ஆமீர்கான் விளக்கம்

Admin

ஏ.ஆர்.ரஹ்மானிடம் ரூ.3 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனு… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Admin

சமூக வலைத்தளங்களில் இருந்து விலகினார் அமீர் கான்!

Admin

சார்பட்டா பரம்பரை படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Admin

மாஸ் காட்டிய அண்ணாத்த… விரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..

Admin

வெளியானது நெற்றிக்கண் டைட்டில் பாடல்… உற்சாகத்தில் நயன்தாரா ரசிகர்கள்…

Admin

நடிகர் மம்முட்டி மீது வழக்குப் பதிவு காரணம் என்ன??

Admin

கொஞ்சம் காதலால் : வைரலாகும் கியரா அத்வானி வீடியோ!

Admin

Leave a Comment