பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயங்கும் மக்களின் சிம் கார்டுகளின் இணைப்புகள் முடக்கப்படும் என அரசு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றை முறியடிக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வது தான் ஒரே தேர்வு என உலக பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் அனைத்து நாடுகளும் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தானில் மக்களிடையே விழிப்புணர்வு கொடுத்தும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பெருவாரியான மக்கள் முன்வராததால் இந்த முடிவை அந்த பஞ்சாப் மாகாண அரசு எடுத்துள்ளது.
மேலும் முதல் டோஸ் செலுத்திக் கொண்ட மக்கள் இரண்டாவது டோஸை செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டாதது அம்மாகாண அரசை அதிருப்தியில் ஆழ்த்தியதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்