பாஜகவின் நிலைப்பாடு குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன்நேர்மையாக வாக்களித்த மக்களுக்கு நன்றி. அவர்களுக்கும் ஜனநாயகத்திற்கும் வணக்கம் தெரிவிக்க கோவை வந்துள்ளதாக கூறினார்
மேலும், கொங்குநாடு அரசியல் கோஷம் மட்டுமே, மக்கள் தேவை அல்ல. கோவை மக்களுக்கு திட்டங்களில் பிரிவினை பார்க்கப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் பங்கு மட்டுமே இருக்க வேண்டும் என கூறிய கமல்ஹாசன்.
மேலும்கிழக்கிந்திய கம்பெனி போல, வடக்கில் பா.ஜ.க. எனும் வடக்கிந்திய கம்பெனி தயாராகி வருகிறது. மேகதாது விஷயத்தில் பா.ஜ.க இரட்டை வேடம் போடுவதாக கூறிய கமல்ஹாசன் கொரோனா நடவடிக்கையில் ஆளுங்கட்சி முடிந்ததை செய்கிறது. இன்னும் அதிகமாக, தீவிரமாக செயல்பட வேண்டும் என கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்