வேட்டைக்காரன் படத்தில் இருந்து ’ஒரு சின்னத்தாமரை…’ பாடலுடன் ஆரம்பித்தது ஒன்பதாம் நாள். என்ன பிக் பாஸ் பழைய பாடலுடன் ஆரம்பிக்குறாரேன்னு பாத்தா, அப்புறம் பாத்ரூமில் பிரியங்கா சொன்னத்துக்கு அப்புறம்தான் தெரிகிறது அது தலைவரான தாமரைக்காக டெடிகேட் செய்யப்பட்ட பாடல் என்று. முடியல பிக் பாஸ்…
’போர்வையை எல்லாம் மடிக்காம வந்துட்ட… நான் தான் மடிச்சு வெச்சேன்’னு தாமரை சொல்ல, ’அதான் மடிச்சிட்டல்ல… அப்போ இனிமே நீயே மடிச்சு வெச்சுடு…’ன்னு நக்கலடித்தார் ராஜூ.
பிரியங்கா வெளியில் உல்ள சோபாவில், ’நான் தூங்கல…’ அப்டிங்குற மாதிரி கைய ஆட்டிக்கிட்டே தூங்க, பிக் பாஸ் நாய் விட்டுவிடுமா என்ன… நாய் குரைக்க உள்ளிருந்து ஓடிவந்தார் தாமரை. நான் தூங்கலைன்னு பிரியங்கா சமாளிக்க, நீ போய் பாத்திரம் விளக்குன்னு தாமரை சொல்ல, இமான் அண்ணாச்சிய கழுவ சொல்லுங்கன்னு டிமிக்கி கொடுத்தார் பிரியங்கா.
அடுத்து கத சொல்லட்டுமா டாஸ்க்கில் கதை சொல்ல வந்தவர் அக்ஷரா. (ஏன் பிக் பாஸ் ஒரு டாஸ்க்க ரெண்டு வாரமாவா இழுக்குறது).. சத்தியமா முடியல.. இப்படி இழுத்து இழுத்து கத சொல்றதுனால, இவங்க யாருன்னு தெரிஞ்சுக்குற ஆசையே போயிடுது பிக் பாஸ்.
’நான் எப்பவும் கம்பர்ட் ஜோன்லயே இருந்ததால அதுல இருந்து என்ன நானே வெளில கொண்டு வரதுக்காக பிக் பாஸ் வீட்டுக்கு வந்திருக்கேன்’ன்னு சொன்னாங்க அக்ஷரா. இறந்துபோன அப்பாவைப் பத்தி பேசும் போது கண்கலங்கினாங்க. ஆனா அது கொஞ்சம் அழுதே ஆகணும்னு அழுத மாதிரி இருந்தது. மனசுல ஒட்டலை…
இதற்கு பிரியங்கா, நிரூப், அபிஷேக் டிஸ்லைக் கொடுத்தாங்க, ’உன்ன கம்பர்ட் ஜோன்ல இருந்து வெளியக் கொண்டு வர இந்த டிஸ்லைக் உதவியா இருக்கும்’னு சமாளிக்கவும் செய்தார் பிரியங்கா.
சரி நம்ம கதாசிரியர் என்ன குடுக்கப் போறாருன்னு எல்லாரும் ஆவலா எதிர் நோக்க, ராஜூ லைக்கை கொடுத்து உன் கதையில ஒரு நேர்மை இருந்தது அதனால உனக்கு லைக் கொடுக்குறேன்னு சொன்னாரு. அக்ஷராவை ராஜூவிற்கு பிடிக்கும் போல, அதான்…
ஆனா பிரியங்கா விடுவாரா… ’உனக்கு பிடிக்கும்ன்றதால லைக் போடுவியா?, அப்போ சின்னபொண்ண உனக்கு பிடிக்காதா?, சின்ன பொண்ணு கதையில எவ்ளோ எமோஷன் இருந்தது, அதுக்கே டிஸ்லைக் கொடுத்த, இந்த பொண்ணு கதையில ஒன்னுமே இல்ல, அதுக்கு போய் லைக் கொடுக்குற…’ன்னு பங்கமாக நேருக்கு நேர் கேட்டார் பிரியங்கா.
நியாயமான கேள்வி தான்… தனக்கு வந்த டிஸ்லைக்குகளுக்காக தனியே நின்று அழுதுக்கொண்டிருந்தார் அக்ஷரா… ஆனால் அக்ஷரா வந்ததே இந்த மாதிரி விமர்சனங்களை எதிர்க்கொள்ளத்தானே… அதற்கு பிக் பாஸ் ரொம்ப நல்லாவே உதவுவார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அடுத்து கதை சொல்ல வந்தவர் பிரியங்கா, வழக்கமான அவருடைய பாணியில், கேலி, கிண்டல், கான்ஃபிடன்ஸுடன் கூறினார். தன் அப்பாவை பற்றிப் பேசிய இடத்தில் கொஞ்சம் எமோஷன் ஆனார், ஆனாலும் அழாமல் பேசினார். ’யாராவது உதவி செஞ்சிருந்தா என் அப்பாவை காப்பாத்தி இருக்கலாம்’ன்னு அவர் சொன்னது, உண்மையிலேயே துயரமான விஷயம்தான்.
‘நான் ஜாலியா இருந்தா என் அம்மா சந்தோஷமா இருப்பா அதனால நான் எனக்கு என்ன தோணுதோ அத என் வாழ்க்கையில நான் செஞ்சிட்டு இருக்கேன்’னு முடிச்சாங்க பிரியங்கா.
பிரியங்கா கதைக்கு வருண், நிரூப் லாம் டிஸ்லைக் கொடுத்துட்டு, கதை நல்லா இருந்தது ஆனா இம்ப்ரஸ் ஆகுற அளவுக்கு ஒன்னும் இல்லைன்னு சமாளிச்சாங்க.
அப்புறம் நம்ம கதாசிரியர், பிடிச்சிருக்குன்னு லைக் போடுவியான்னு கேட்ட பிரியங்காவிற்கு, அதையே திருப்பி சொல்லி, ’உங்கள பிடிக்குங்குறதுக்காக லைக் போட முடியாது, லைக் போட்டவங்களுக்கு லவ் தருவேன், டிஸ்லைக் போட்டவங்களுக்கு இன்னும் அதிகமா லவ் தருவேன்னு சொன்னீங்க, எனக்கு உங்ககிட்ட இருந்து அதிக அன்பு வேனுங்குறதுனால டிஸ்லைக் போடுறேன்’னு கேவலமா சமாளிச்சாரு கதாசிரியர்.
’எல்லாருமே ஒரு இலக்கோட ஓடிக்கிட்டே இருக்கணுமா என்ன, தனக்கு பிடிச்ச மாதிரி வாழ்க்கை நம்மை எங்க கூட்டிட்டு போகுதோ அந்த பாதையில ஜாலியா வாழ்கையையை வாழ்றதும் ஒரு அழகுதான்…. ஏர் ஹோஸ்டஸ் ஆகணும்னு ஆசைப்பட்டேன் முடியல, ஆங்கரிங் வேலை கிடைச்சது, பிடிச்சது அதுவும் ஜாலியா என்ஜாய் பண்ணி பண்றேன்’ என்று இயல்பாக கூறினார் பிரியங்கா.
அடுத்து கதை சொல்ல வந்தவர் சிபி, எதற்கும் பயப்படக் கூடியவர், வளர வளர சூழ்நிலைகளை கண்டும் பயப்பட, அதிலிருந்து வெளிவர தன் குடும்பம் பெரும் உதவியாக இருந்தது பற்றியும், சினிமா வாய்ப்புகள் பற்றியும் கூறினார். ’இளைஞர்களை நம்புங்க, அவங்க கனவுகளை நம்புங்க’ன்னு வேண்டுகோளுடன் முடித்தார்.
அக்ஷராவும் தாமரையும் கிச்சனில் பேசிக்கொண்டிருந்தனர், ’நீங்க சில விஷயங்களை பேசுறது கஷ்டமா இருக்கு அது நீங்க தெரிஞ்சு பேசுறீங்களா இல்ல தெரியாம பேசுறீங்களான்னு தெரியல அதான் நான் கொஞ்சம் உங்ககிட்ட இருந்து ஒதுங்கி இருக்கேன்’னு சொன்னாங்க அக்ஷரா. ’இல்லம்மா நான் யதார்த்தமா தான் பேசுறேன்’னு சொன்னாங்க தாமரை.