ஆப்கானில் அமெரிக்க படைகள் போர் செய்து கொண்டு இருக்க முடியாது, என்னோடு இந்த போர் முடிவிற்கு வரட்டும்,என்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் இன்று செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார்.
ஆப்கானில் கடந்த 20 வருடமாக இருந்த அமெரிக்க படைகள் வெளியேறியதால் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று ஆப்கான் அதிபர் அப்சர் கானி பதவி விளக்கினார். தாலிபான்களின் இந்த வெற்றிக்கு அமெரிக்கா மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
முக்கியமாக அமெரிக்க படைகளை அமெரிக்க அதிபர் ஜோபைடன் வெளியேற்றிய விவகாரம் கடும் விமர்சனங்களை உள்ளாகியது.
ஜோபைடனின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்திருந்த முன்னாள் அதிபர் டிரம்ப் ஆப்கானிஸ்தானில் நடைபெறும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் அமெரிக்க அதிபர் ஜோபைடன் தான் என்றும் இது அமெரிக்க வரலாற்று தோல்வி எனக் கூறிய டிரம்ப்.
அமெரிக்காவின் இந்த செயல்காலம் முழுவதும் பேசப்படும். இதற்கு பொறுப்பேற்று அமெரிக்க அதிபர் பதவியை அதிபர் ஜோ பைடன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஆப்கான் விவகாரம் குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஆப்கானிஸ்தானில் நடக்கும் விஷயங்களை பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் இணைந்து தீவிரமாக கண்காணித்து வருகிறேன்.
நாங்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை கட்டமைக்க வேண்டும் என்று அங்கு செல்லவில்லை. அது எங்கள் பணியல்ல. ஆப்கானிஸ்தானுக்கு முக்கியமான சில குறிக்கோளுடன் சென்றோம்.
அல் கொய்தாவை முறியடிக்கவும், ஒசாமாவை பிடிக்கவும் இந்த போர் தொடுப்பு நடத்தப்பட்டதாக கூறினார்.
எப்போது படைகளை வாபஸ் வாங்கினாலும் இதே நிலைதான். 5 வருடங்களுக்கு முன் வாபஸ் வாங்கினாலும் இப்படித்தான் நடந்து இருக்கும் 15 வருடங்களுக்கு பின் வாபஸ் வாங்கினாலும் இப்படித்தான் நடந்திருக்கும் என கூறினார்.
மேலும், ஆப்கானிஸ்தானில் நினைத்ததை விட வேகமாக மாற்றம் நடந்துவிட்டது. ஆப்கான் படைகள் தோல்வி அடைந்துவிட்டது.
ஆப்கான் தலைவர்கள் அதிபர் விட்டு வெளியேறிவிட்டார். ஆப்கான் அரசும், படையும் தாலிபானை எதிர்க்காத போது நாம் ஏன் அவர்களை எதிர்க்க வேண்டும் எனக் கூறிய ஜோபைடன்
ஆப்கான் படைகளே தங்கள் நாட்டை காக்காத போது, அப்படி ஒரு போரை நடத்த வேண்டிய அவசியம் அமெரிக்க படைகளுக்கு கிடையாது. அப்படி ஒரு போரில் மரணிக்க வேண்டிய அவசியம் அமெரிக்க படைகளுக்கு கிடையாது என கூறினார்.
ஆப்கானிஸ்தானை ஒற்றுமைப்படுத்த எத்தனை ஆண்டுகள், எவ்வளவு படைகள் முயன்றாலும் முடியாது என கூறிய ஜோபைடன்,நான் என்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறேன்.
ஆப்கானில் 20 வருடமாக போர் நடக்கிறது, இந்த போரை எதிர்கொள்ளும் 4வது அதிபர் நான். இதே போரை நான் இன்னொரு அதிபருக்கு கடத்தி செல்ல மாட்டேன்.நான்தான் இப்போது அதிபர். என்னோடு இந்த போர் முடியட்டும், முந்தைய அதிபர்கள் செய்த தவறை நானும் செய்ய மாட்டேன்.. எனக்கு இது வருத்தம் தருகிறது.
ஒசாமா பின் லேடனை கொன்றதோடு அமெரிக்காவின் பணி முடிந்துவிட்டதாக கூறினார்
மேலும்,ஆப்கானிஸ்தானை மாற்றுவது நம் வேலை இல்லை. ஆப்கானிஸ்தானில் வாழ்நாள் முழுக்க போர் செய்ய முடியாது.நான் நம் நாட்டு வீரர்களிடம் அதை கேட்க மாட்டேன் என ஜோபைடன் கூறியுள்ளார்