வாங்கிய கடனை திரும்பிச் செலுத்திய பின்பும் என்னை கடன்காரர் என ஏன் வங்கிகள் அழைக்கிறது என்று தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார்.
தொழிலதிபர் விஜய் மல்லையா பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 13 வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி விட்டு அதனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச்சென்றார்.
அவர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்துள்ளதோடு மல்லையாவை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் விஜய் மல்லையாவின் சர்வதேச அளவிலான சொத்துக்களை முடக்க பிரிட்டன் உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது.
விஜய் மல்லையாவுக்கு எதிராக திவால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவரது சொத்துக்களை முடக்க இந்திய வங்கிகளுக்கு நிபந்தனையற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் இருந்து வரவேண்டிய நிலுவைக் கடன் மொத்தமும் மீட்கப்பட்டதாக ஐடிபிஐ வங்கி அறிவித்துள்ள நிலையில் இதுதொடர்பாக அவர் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கடனை திரும்பிச் செலுத்திய பின்பும் என்னை கடன்காரர் என்று வங்கிகள் சொல்கிறது என தெரிவித்துள்ளார்.