அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வியை தழுவினார். இதனையடுத்து ஜோ பைடன் வெற்றிபெற்றதை அங்கீகரிப்பதற்கான நடைமுறைகள் அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றன.
ஆனால் ட்ரம்ப் அவரது தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை இதனால் தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் சமூகவலைதளங்களில் பதிவிட்டார்.
அவரது பதிவுகளால் தூண்டப்பட்ட ஆதரவாளர்கள கேப்பிட்டல் கட்டிடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் டிரம்பின் பேஸ்புக் , டுவிட்டர் போன்ற சமூகவலைதள பக்கங்கள் முடக்கபட்டன.
இந்த நிலையில் தற்போது இந்நிலையில், டொனால்டு டிரம்பின் பேஸ்புக் கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் இந்த செயலுக்கு டிரம்ப் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
– மூவேந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்