வாட்ஸப்பின் அடடே அப்டேட்!.

SHARE

வாய்ஸ் மெசேஜ் சேவையை இன்னும் மேம்படுத்தும் புதிய அப்டேட்டை வாட்ஸப் நிறுவனம் உருவாக்கி உள்ளது.

நேரில் பேசுவதைவிட எழுத்துப்பூர்வமாக உரையாடுவது சில நேரங்களில் நல்லது. குறிப்பாக லொடலொட என்று பேசும் மனிதர்களிடம் மணிக் கணக்கில் பேசினாலும் வெளிவராத தகவல்கள் அவர்களிடம் வாட்ஸப்பிலோ மெசேஞ்சரிலோ எழுத்துப்பூர்வமாக உரையாடினால் கிடைத்துவிடும். இதன் காரணம் தட்டச்சு செய்வதில் மனிதர்களுக்கு ஏற்படும் அலுப்புதான்.

ஆனால், வாட்ஸப் செயலியில் வாய்ஸ் மெசேஜ் தொழில்நுட்பம் வந்த உடன், லொடலொட என்று பேசுவபர்களுக்கு இது ஒரு வரப் பிரசாதமாகிவிட்டது. அதே சமயம் அவர்களின் எதிர் முனையில் உள்ளவர்களுக்கு இது பெரிய தலைவலியாகவும் உள்ளது. அவ்வளவையும் பொறுமையாகக் கேட்க வேண்டிய நிர்பந்தமும், நேர விரயமும் இதனால் ஏற்படுகின்றன.

இதனை மனதில் வைத்து வாய்ஸ் மெசேஜ் சேவையில் ஒரு புதிய வசதியை வாட்ஸப் உருவாக்கி உள்ளது. வீடியோ மற்றும் ஆடியோ பிளேயர்களில் நாம் பாஸ்டு பார்வர்டு பொத்தானைப் பயன்படுத்தி ஒரு ஒலிப்பதிவை அதிக வேகத்தில் கேட்க முடியும், அதே அம்சத்தை வாய்ஸ் மெசெஜ்களிலும் வாட்ஸப் நிறுவனம் உருவாக்கி உள்ளது. 

இதனால் வாய்ஸ் மெசேஜ்களை எதிர்வரும் காலங்களில் 50% கூடுதல் வேகத்தில் அல்லது இன்னொரு மடங்கு கூடுதல் வேகத்தில் கேட்க முடியும். இப்படிக் கேட்கும்போதும் மெச்சேஜ்ஜில் உள்ள செய்தியைப் புரிந்து கொள்ள இயலும். எனவே இந்தப் புதிய வசதி பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது இந்த வசதி சோதனை ஓட்ட நிலையில் உள்ளது.

– நமது நிருபர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

லாக்டவுனில் அதிகமாக ஆபாச படம் பார்த்த இளைஞர்கள் – அதிர்ச்சி தகவல்

Admin

ஜூலை 19ம் தேதிக்கு பின் ஊரடங்கு இருக்காது.. பிரதமர் நம்பிக்கை

Admin

COWIN இணையத்தில் தமிழ் மொழி சேர்ப்பு..! ஆனாலும் 12ஆம் இடம்தான்!.

Admin

வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய் அதிக பாதிப்பு இல்லை

Admin

இஸ்ரேலிய நடிகையின் பதிவால் டுவிட்டரில் சர்ச்சை…

சிம்பன்சியைக் காதலிக்கும் பெண்!. காதலைப் பிரிக்கும் மிருகக் காட்சி சாலை – விநோத காதல் கதை..!

Admin

பிரம்மபுத்ராவில் அணை கட்டும் சீனா: அதிர்ச்சியில் இந்தியா, வங்க தேசம்

Admin

தேர்தல் விளம்பரங்கள்: சமூக ஊடகங்களுக்கு என்ன நிபந்தனை?

Pamban Mu Prasanth

ஒலிம்பிக்கில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை?

Admin

டோக்கியோவில் அதிகரிக்கும் கொரோனா : பதட்டத்தில் ஒலிம்பிக் போட்டி!

Admin

அமெரிக்கா – பிரிட்டன் இடையே பயண வழித்தடம்: இரு நாட்டு அதிபர்கள் ஆலோசனை

Admin

முதல்வரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க தனி இணையதளம் தொடக்கம்!

Admin

Leave a Comment