Author: Admin

தமிழ்கத்தின் தலைசிறந்த இலக்கியவாதிகளில் ஒருவருமான சோ.சத்தியசீலன் திருச்சியில் உடல்நலக் குறைவால் காலமானார். 88 வயதான சத்தியசீலன் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இலக்கியத் திறனுக்காக கலைமாமணி, சொல்லின் செல்வர் விருதுகளை சோ.சத்தியசீலன் பெற்றுள்ளார். குன்றக்குடி அடிகளாரால் நாவுக்கரசர் என்ற பட்டமும் பெற்றவர். பள்ளி ஆசிரியர், கல்லூரி பேராசிரியர், கல்லூரி முதல்வர் ஆகிய பதவிகளையும் சோ.சத்தியசீலன் வகித்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது. சத்யசீலன் மறைவுக்கு ஆசிரியர்களும், தமிழறிஞர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பல்வேறு தரப்பினரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

Read More

யாரென்றே அடையாளம் தெரியாதவர்கள் மக்கள் நீதி மய்யத்தில் சேர்ந்து அங்கீகாரம் பெற்றவுடன் பிற கட்சிகளுக்கு சென்றுள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் மெளரியா விமர்சித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி தோல்வி அடைந்ததால் மக்கள் நீதி மையம் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன் விலகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்மபிரியா உள்ளிட்ட பலரும் கட்சியிலிருந்து விலகி நிலையில் நேற்று முன்தினம் முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்த நிலையில் மகேந்திரனும் பத்மபிரியாவும் திமுகவில் இணைந்தது குறித்து வள்ளுவர் கோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மையம் துணை தலைவர் மெளரியா , துரோகம் என்பதை கமல்ஹாசன் அன்றே குறிப்பிட்டு இருந்தார். யார் என்று அடையாளம் தெரியாத நிலையில் இருந்தவர்கள் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அடையாளத்தைப் பெற்று வியாபாரப் பொருளாக்கி பிற…

Read More

சென்னை அண்ணா சாலையில் 10 வயது சிறுவன் சசிவர்ஷன் என்பவர் தனது மாமாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது தூக்க கலக்கத்தில் கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. ரத்த வெள்ளத்தில் துடித்த சிறுவனை உடனடியாக சிகிச்சை செய்ய முடிவெடுத்த டாக்டர்கள், சிறுவனுக்கு வலி தெரியாமல் இருப்பதற்கான ஊசியை செலுத்த முயற்சித்துள்ளனர். அந்த சிறுவன் சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால் டாக்டர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தனர். அப்போது அங்கு வந்த தன்னார்வலர் ஒருவர் சிறுவனிடம் நைசாக பேச்சுக் கொடுத்தபோது, சசிவர்ஷன் ஒரு தீவிரமான விஜய் ரசிகன் என்பதை தெரிந்து கொண்டார். இதனையடுத்து அவர் தனது மொபைல் போனில் இருந்த விஜய் நடித்த பிகில் படத்தை காண்பித்தார். அந்த சிறுவன் உற்சாக மிகுதியில் பிகில் படத்தை பார்த்து கொண்டிருக்கும் போதே சிறுவனுக்கு வலி தெரியாமல் இருக்கும் ஊசியை டாக்டர்கள் செலுத்தினர். அந்த சிறுவனும் விஜய் படத்தை பார்த்துக் கொண்டே சிகிச்சைக்கு ஒத்துழைத்தான். இதனையடுத்து…

Read More

ஆன்லைன் விளையாட்டிற்கு விளையாட அழைப்பது போல் போலி லிங்க் வழியாக மோசடி செய்யும் மர்ம கும்பலிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது. சமீபத்தில் ஆன்லைனின் மோசடிகள் அதிகமாக நடக்கிறது. ஆன்லைன் விளையாட்டு போட்டியில் விளையாடும் நபர்களை குறி வைத்து போலி லிங்க் வழியாக நுழையும்போது அவர்களது செல் போனில் உள்ள தகவல்கள் அனைத்தையும் மோசடி கும்பல் திருடி விடுவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். காவல்துறை, அங்கீகரிக்கப்பட்ட இணையத்தளத்தின் மூலம் நடத்தப்படும் ஆன்லைன் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டியும், பாதுகாப்பில்லாத இணையத்தளங்களின் வழியாக எந்தவித ஆன்லைன் போட்டிகளிலும் கலந்து கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர். கூகுள் அக்கவுண்ட்கள், தகவல்கள் உள்ளிட்டவை திருடப்பட்டால் உடனடியாக சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்குமாறும் கூறியுள்ளனர்.

Read More

டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிபெரும்பான்மை பெற்று தமிழகத்தில் அரசு பொறுபேற்ற பிறகு, முதன்முறையாக பிரதமர் மோடியை சந்திக்க, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திட்டமிட்டுள்ளார். இதற்காக நேற்று இரவு சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் பன்வாரிலால் புரோகித். இந்த சந்திப்பின் போது, தமிழக அரசியல் நிலவரம் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது. நீட் தேர்வு விலக்கு, மேகதாது அணை மற்றும் 7 பேர் விடுதலை உள்ளிட்ட தமிழக அரசின் கோரிக்கைகளை, பிரதமரிடம் எடுத்துரைக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் மொழியை இந்திய அலுவல் மொழிகளில் ஒன்றாக அறிவிக்க ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்பன உள்ளிட்ட சில…

Read More

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, கிரிக்கெட் விளையாடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மக்கள் நலன்கருதி பல்வேறு அதிரடி அறிவிப்புகள் நடைமுறைக்கு கொண்டு வந்ததன் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. கொரோனா நிவாரணம் வழங்குதல் தொடங்கி பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். இதற்கிடையில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, இரண்டு நாள் பயணமாக கடப்பா மாவட்டத்திற்கு சென்றுள்ளார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த அவர், கடப்பாவில் உள்ள விளையாட்டு மைதானத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்தார். அப்போது மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்களுடன் திடீரென ஜெகன் மோகன் ரெட்டியும் கிரிக்கெட் விளையாட தொடங்கினார். ஆய்வுப் பணிக்கு வந்த முதலமைச்சர் திடீரென ஆர்வமுடன் கிரிக்கெட் விளையாடியதை பொதுமக்களும், கட்சித் தொண்டர்களும் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். கிரிக்கெட் விளையாடும் ஜெகன்மோகன் ரெட்டியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read More

அதிமுக கூட்டணி கட்சிகள் குறித்து பொதுவெளியில் விமர்சனம் செய்யக்கூடாது என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் அறிவுறுத்தியுள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று கூடியது.அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அந்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மேகதாது அணை கட்டப்படுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உள்ளாட்சி தேர்தல் மற்றும் பல்வேறு முக்கிய குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்ட கட்சிகளுடன் கூட்டணி தொடர்வதாகவும், இதனால் கூட்டணி கட்சிகள் மீது பொதுவெளியில் விமர்சிக்க கூடாது என மாவட்ட செயலாளர்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Read More

பேட்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா உறுதியானதால் இந்தியா – இலங்கை கிரிக்கெட் தொடர் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா 2ஆம் தர அணி 3 டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி ஜூலை 13 ஆம் தேதி நடக்கவிருந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவர் மற்றும் உதவி ஊழியர் ஜி.டி.நிரோஷன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள். இதனால் ஒருநாள் தொடர் 4 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி முதலாவது ஒரு நாள் போட்டி 17 ஆம் தேதியும் 2-வது ஒருநாள் போட்டி 19 ஆம் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 21 ஆம் தேதியும் நடைபெறுகிறது. மேலும் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடர் முறையே 24, 25, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும்…

Read More

தனுஷ் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியான ரவுடி பேபி பாடல் மீண்டும் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. தனுஷ் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு ‘மாரி 2’ திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் பல சாதனைகளை படைத்துள்ளது. அதிலும் அப்படலின் சிறப்பு பிரபுதேவாவின் நடன இயக்கம், யுவனின் இசை, தீயின் குரல் தனுஷ் மற்றும் சாய்பல்லவியின் நடனம் என பாடல் அனைத்து வகைகளிலும் சிறப்பாக அமைந்திருந்தது. ஏற்கனவே ரவுடி பேபி பாடல் 100 கோடி பார்வைகளைப் பெற்ற முதல் தென்னிந்திய பாடல் என்ற சாதனையைப் படைத்தது.இந்நிலையில் ரவுடி பேபி பாடல் யூடியூபில் ஐந்து மில்லியன் லைக்குகளை பெற்று, தற்போது புதிய சாதனையை படைத்துள்ளது.

Read More

திருநங்கைகளுக்கு இரண்டாம் தவணையாக 2,000 ரூபாய் நிவாரணம் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவருக்கு இரண்டாம் தவணையாக 2,000 ரூபாய் நிவாரணம் வழங்குவதற்காக 1 கோடியே 72 லட்ச ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் உத்தரவின்படி கொரோனா நிவாரணத்தொகையாக ஏற்கனவே தமிழக அரசு குடும்ப அட்டை வைத்திருக்கும் இரண்டாயிரத்து 956 பேருக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. மேலும் குடும்ப அட்டை இல்லாத திருநங்கைகள் வாரியத்தில் பதிவு செய்திருந்த 8,493 பேருக்கு தலா 2,000 ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது தவணையாக 8,591 திருநங்கைகளுக்கு தலா 2,000 ரூபாய் வழங்குவதற்கு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

Read More