சர்வதேச அளவில் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக விளங்கும் அமேசானின் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பிஸோஸ் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.
அமேசான் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெஃப் பெசோஸ், 200 பில்லியன் டாலர் செல்வத்தை ஈட்டிய உலகின் முதல் நபராக மாறியுள்ளார். சுமார், 56 வயதான அவர் தற்போது 205 பில்லியன் டாலர் மதிப்புடையவர்.
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான இவர், இன்று அமேசான் சி.இ.ஓ. பதவியை விட்டு விலக உள்ளார். காரணம் ஜெஃப் பிஸோஸ் தனது தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம் விரிவாக்கப் பணிகளில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அமேசானின் நிர்வாகத் தலைவராக அவர் நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஆண்டி ஜாஸி புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்