கொரோனாவால் குறைந்த மதுபான விற்பனையை அதிகரிக்க தெலங்கானா அரசு புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளது.
கொரோனாவால் இந்திய அரசின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மாநில அரசுகள் அதனை மீட்க புதுவிதமான முயற்சிகளை கையில் எடுத்து வருகிறது.
அந்த வகையில் தெலங்கானா அரசு கொரோனாவால் குறைந்த மதுபான விற்பனையை அதிகரிக்க புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளது.
மக்கள் மதுக்கடைகளுக்கு செல்வதை ஊக்குவிக்கும் வகையில் உரிமம் பெற்ற மதுக்கடையில் வாரம் ஒரு நாள் இலவசமாக மது வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக டோக்கன் விநியோகிக்கப்பட்டு, அதன்பின் குறிப்பிட்ட அளவுக்கு இலவசமாக மது வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதனால் மது பிரியர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்